ஜேசுதாஸ் இந்து மதத்துக்கு மாறியதாக வெளியான செய்தியில் எந்த ஒரு உண்மையுமே இல்லை: மனைவி பிரபா மறுப்பு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பிரபல பாடகர் ஜேசுதாஸ் இந்துமதத்துக்கு மாறியதாக பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கொளுத்திப் போட்ட தகவலை அவரது மனைவி பிரபா ஜேசுதாஸ் மறுத்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸ் தமது 76-வது பிறந்த நாளையொட்டி கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். இதனால் அவர் இந்து மதத்துக்கு மாறிவிட்டதாக வதந்திகள் ரெக்கை கட்டி பறந்தன.

Yesudas’ family denies report on conversion

இது தொடர்பாக தமது ட்விட்டர் கச்சேரியில் பதிவிட்டிருந்த பாஜக எம்.பி சுப்பிரமணியன் சுவாமி, அப்படி ஜேசுதாஸ் தாய் மதமான இந்து மதத்துக்கு மாறி இருந்தால் வரவேற்போம் என பதிவிட்டிருந்தார். இது பெரும் பரபரப்பை கிளப்பியது.

ஆனால் இத்தகைய செய்திகளை ஜேசுதாஸ் மனைவி பிரபா அடியோடு மறுத்துள்ளார். இது தொடர்பாக பிரபா ஜேசுதாஸ் கூறியுள்ளதாவது:

மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இருப்பதாக நம்புகிறவர் ஜேசுதாஸ்... அவரைப் பொறுத்தவரை கடவுள் நம்பிக்கையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

ஜேசுதாஸ் இந்து மதத்துக்கு மாறும் எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இதுபோன்ற செய்திகள் எப்படி வெளியாகின்றன எனத் தெரியவில்லை.. இந்த செய்தியில் உண்மை எதுவுமே இல்லை.

இவ்வாறு பிரபா ஜேசுதாஸ் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+