குஜராத் எக்ஸிட் போல் ஓகே.. இந்த கணிப்பு பாஜகவுக்கு ஷாக் கொடுக்கிறதே!
Recommended Video

காந்திநகர்: டிவி சேனல்கள் சார்பில் வெளியான குஜராத் எக்ஸிட் போல்கள் பலவும் பாஜகதான், வெல்லும் என கூறியுள்ளன. ஆனால், சில நிபுணர்கள் வேறு மாதிரி கருத்து கூறுகிறார்கள்.
குஜராத்தில் மொத்தம் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. 2வது கட்ட தேர்தல் நேற்று முடிந்தது.
இதையடுத்து பல டிவி சேனல்களும், கருத்து கணிப்பு ஏஜென்சிகளுடன் இணைந்து எடுத்த கருத்து கணிப்பு முடிவுகளை இரவு வெளியிட்டன.

எளிதான வெற்றி
அனைத்து டிவி சேனல்களுமே குஜராத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என தெரிவித்தன. ஆனால் சஹாரா டிவி மட்டும்தான் அதிகபட்சமாக 120 சீட்டுகள் வரை பாஜக வெல்லும் வாய்ப்புள்ளது என கூறியது. பிற சேனல்கள் அதைவிட குறைவான சீட்டுகளையே சுட்டிக்காட்டுகின்றன. இதனால் பாஜக முன்னிலை பெற்றாலும் அறுதி பெரும்பான்மை பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
|
யோகேந்திர யாதவ் கணிப்பு
இந்த நிலையில், ஸ்வராஜ் இந்தியாவின் தேசிய தலைவரும், டிவி சேனல் விவாதங்களில் பங்கேற்கும் அரசியல் விமர்சகருமான, யோகேந்திர யாதவ் கணிப்பு வேறு மாதிரி உள்ளது. அவர் இரு தினங்கள் முன்பு இந்த கணிப்பை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

பல வகை
அவரது கணிப்புபடி, சூழ்நிலை 1: பாஜக 43 விழுக்காடு வாக்கு சதவீதத்துடன் 86 சீட்டுகளை பிடிக்கலாம். காங்கிரஸ் அதே அளவுக்கான வாக்கு சதவீதம் பெறும். ஆனால் 92 சீட்டுகள் வரை பிடிக்க வாய்ப்புள்ளது.

இப்படியும் நடக்கலாம்
சூழ்நிலை 2: பாஜகவுக்கு 41 சதவீதம் வாக்குகள் கிடைக்கலாம், 65 சீட்டுகள் கிடைக்கலாம். காங்கிரசுக்கு 45 சதவீதம் வாக்குகளும், 113 சீட்டுகளும் கிடைக்கலாம். இவ்வாறு இரு சூழ்நிலைகளை சொல்லும் அவர் 3வது ஒரு சூழ்நிலை இருப்பதாகவும் சுட்டிக் காட்டுகிறார்.

இதுவும் நடக்கலாம்
சூழ்நிலை 3: இதையும் சும்மா எடுத்துக்கொள்ள முடியாது. பாஜகவுக்கு மிகப்பெரிய தோல்வி காத்திருக்கிறது. இவ்வாறு தனது கணிப்புகளில் அவர் தெரிவித்துள்ளார். டிவிட்டரில் போட்டோ ஒன்றையும் அவர் இணைத்து விளக்கியுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications