கெஜ்ரிவால்க்கு ஆன்டி வைரஸ் பிடிக்காதாமே? கிண்டலடிக்கும் டுவிட்டர் பதிவுகள்
டெல்லி: ஆம் ஆத்மி கட்சி மூலம் சாமானிய மக்களின் பிரதிநிதியாகி டெல்லி முதல்வராகி இருக்கும் அரவிந்த் கேஜ்ரிவால், ட்விட்டரில் நிச்சயம் இப்படி ஒரு புகழை எதிர்பார்த்திருக்க மாட்டார்.
அரசியலில் அவர் வலியுறுத்தும் நேர்மை பற்றி நாட்டு மக்கள் பேசுகிறார்களோ இல்லையோ... ட்விட்டரில் அவரது நேர்மை பற்றிய குறும்பதிவுகள் குவிந்து கொண்டிருக்கின்றன.
ட்விட்டரில் இப்படி திடீர் புகழுக்கு ஆளாவது அடிக்கடி நடப்பதுதான். பொதுவாக சர்ச்சைக்குரிய வகையில் ஏதாவது கூறி, சிக்கிக்கொண்டால் அதை வைத்துக்கொண்டு ட்விட்டரில் குறும்பதிவுகளில் வறுத்தெடுத்து விடுவார்கள்.
ஹாலிவுட் பிரபலங்களில் துவங்கி நம் நாட்டு அரசியல்வாதி வரை பலருக்கு இந்தப் பெருமை கிடைத்திருக்கிறது. இப்போது கெஜ்ரிவால் இந்தப் பெருமைக்கு ஆளாகியிருக்கிறார்.

நேர்மைக்கு நையாண்டி
ட்விட்டர் வழக்கப்படி, இந்த குறும்பதிவுகளுக்காக என்றே, ஒரு ஹாஷ்டேகும் உருவாக்கப்பட்டுள்ளது. #YoKejriwalSoHonest (கேஜ்ரிவால் மிகவும் நேர்மையானவர்) எனும் ஹாஷ்டேகுடன் இந்த நகைச்சுவை குறும்பதிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு குறும்பதிவுகளும் ஒரு விதத்தில் கெஜ்ரிவாலின் நேர்மையை நையாண்டி செய்யும் வகையில் அமைந்துள்ளன.

தும்மினாலும் மன்னிப்பு
பக்கத்தில் யாரும் இல்லாவிட்டாலும் தும்மினால், மன்னிப்பு கேட்பார் கெஜ்ரிவால்.

இன்னும் சம்பளம் வாங்கலை
இருமல், காய்ச்சலுமாய் அவதிப்படும் கெஜ்ரிவால், டாக்டரிடம் போய் ஊசி போட போகாமல் இருப்பதற்குக் காரணம், இன்னும் முதல்மாத சம்பளம் வாங்கலையாம்.

வெடிகுண்டு
தீவிரவாதிகள் வைத்த வெடிகுண்டினை கெஜ்ரிவால் கண்டுபிடித்தால் உடனே அதை தீவிரவாதிகளுக்கே அனுப்பிவிடுவார்.

விருந்துக்கு கட்டணம்
கெஜ்ரிவால் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சி விருந்துக்குக்கூட கட்டணம் வசூலித்தார்.

மரபணு பரிசோதனை
'அவர் பள்ளி படிவத்தில் தன் தந்தை பெயரை எழுதுவதற்கு முன்னர் மரபணு பரிசோதனை செய்து கொண்டார்'.

பொய் சொல்லாதவர்
மனைவி நான் குண்டாக இருக்கிறேனா என்று கேட்டால் அவர் ஆம் என்றே பதில் சொல்வார்'.
'ட்ரு லைஸ் படத்தின் முதல் பாதியை மட்டுமே அவர் பார்த்தார்'.

ஆன்டி வைரஸ்
கெஜ்ரிவால் வைர்ஸ் பாதுகாப்பு சேவையை பயன்படுத்துவதில்லை. ஏனெனில் அவருக்கு பாதுகாப்பு பிடிக்காது', 'கெஜ்ரிவால் கம்ப்யூட்டரில் படத்தை டவுண்லோடு செய்து பார்த்தால்கூட டிக்கெட் வாங்கிவிடுவார்'.

கெஜ்ரிவால் விசிட்டிங் கார்டு
'கேஜ்ரிவால் விசிட்டிங் கார்டில் யாருமில்லை (நோபடி) என்றே குறிப்பிடப்பட்டுள்ளது'. 'சுற்றி யாரும் இல்லாவிட்டாலும்கூட அவர் தும்மல் வந்தால் மன்னிப்பு கேட்பார்'. இவை எல்லாம் மாதிரிகள் மட்டுமே.

மூன்று நாட்களாக கிண்டல்
YoKejriwalSoHonest இப்போது கடந்த மூன்று நாட்களாக கிண்டல் கமெண்டுகளால் நிரம்பி வழிகிறது. பலரும் இந்த குறும்பதிவுகளை பார்த்து ரசித்து தங்கள் பங்கிற்கு புதிய கேஜ்ரிவால் நகைச்சுவை குறும்பதிவுகளை உருவாக்கி பகிர்ந்து கொள்கின்றனர். பலர் ஏற்கெனவே வெளியான குறும்பதிவுகளையும் பகிர்ந்து கொள்கின்றனர்.

நகைச்சுவை விருந்து
மாற்று அரசியலை முன்வைத்திருக்கும் கெஜ்ரிவால் ஏற்படுத்தியுள்ள தாக்கம், மக்களவை தேர்தலில் எந்த அளவுக்கு பிரதிபலிக்கும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ட்விட்டரில் அவரது நேர்மையை வைத்துக்கொண்டு நகைச்சுவை விருந்து படைத்துக்கொண்டிருக்கின்றனர்.

கெஜ்ரிவால் ரியாக்சன்
இந்தக் குறும்பதிவுகளை கெஜ்ரிவால் எந்த அளவுக்கு விரும்புவார் என்று தெரியவில்லை. ஆனால் அவர் தன்னையறியாமல் புன்னகைத்து கொள்ளக்கூடும். காரணம், இந்த குறும்பதிவுகள் எல்லாமே அவரது நேர்மையை கிண்டல் செய்பவை.

ஆதரவாளர்களுக்கு வருத்தம்
ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கரை கிண்டலடிப்பதை விட அரவிந்த் கேஜ்ரிவால் நேர்மையை கிண்டலடிக்கும் குறும்பதிவுகள் இதை எல்லாம் மிஞ்சியிருக்கிறது. கேஜ்ரிவால் ஆதரவாளர்களுக்கு இவை வருத்தம் தரலாம். அவரது எதிர்ப்பாளர்களுக்கு ஆனந்தம் தரலாம். ஆனால், என்னதான் கிண்டலடித்தாலும் ஒருவிதத்தில் கெஜ்ரிவால் நேர்மைக்கான அடையாளமாகக்கூட இந்த குறும்பதிவுகளை கருதலாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications