ஜம்மு காஷ்மீருக்கு வரும் தைரியம் மோடிக்கு இருக்கிறதா?: ஒமர் அப்துல்லா கேள்வி
ஸ்ரீநகர்: நாட்டின் பிரதமராக வர விரும்பும் நரேந்திர மோடிக்கு ஜம்மு காஷ்மீருக்கு வரும் தைரியம் இருக்கிறதா? என்று அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்ரீநகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான ஃபரூக் அப்துல்லா, நரேந்திர மோடிக்கு ஓட்டுபோடுபவர்களை கடலில் மூழ்கடிக்க வேண்டும். மதவாதிகளின் கைகளுக்கு நாடு போனால் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இருக்காது என்று கூறினார்.

பரூக் அப்துல்லாவின் இந்த பேச்சுக்கு நரேந்திர மோடி பதிலடி கொடுத்தார். 'மதச்சார்பின்மை என்பது எங்களுடையை ரத்தத்திலும் உள்ளது. காஷ்மீரின் மதச்சார்பின்மையை உங்களது குடும்பம்தான் அழித்துள்ளது. காஷ்மீரில் மதச்சார்பின்மை மீது பெரிய தாக்குதல் நடத்தப்பட உங்கள் தந்தைதான் காரணம். காஷ்மீரில் இருந்து பண்டிட்டுகள் கட்டாய இடம் பெயர்வுக்கு நீங்களே பொறுப்பு என்று சாடினார் மோடி.
இதற்கு ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா அளித்த பதிலில், தந்தை ஃபரூக் அப்துல்லாவின் ஆட்சி காலத்தில் காஷ்மீர் பண்டிட்டுகள் ஜம்மு காஷ்மீரிலிருந்து வெளியேறவில்லை. பாரதிய ஜனதா மற்றும் அதன் தோழமை கட்சியின் ஆட்சி காலத்தில்தான் குறிப்பாக, ஜக்மோகன் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்த காலத்தில்தான் அவர்கள் வெளியேறினார்கள் என்று கூறினார். மேலும் மோடிக்கு காஷ்மீருக்குள் வரும் தைரியமில்லை என்றும் தாக்கியிருக்கிறார் ஒமர் அப்துல்லா.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications