அடேங்கப்பா! தினகரன் எம்எல்ஏக்களின் கூர்க் ரிசார்ட்டில் ஒரு இரவுக்கான குறைந்தபட்ச கட்டண ரூ33,000

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடகாவில் தினகரன் அணி எம்.எல்.ஏக்கள் தற்போது தங்கியிருக்கும் கூர்க் ரிசார்ட்டில் ஒரு இரவுக்கான மிக குறைந்தபட்ச கட்டணம் ரூ33,000.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தற்போது கர்நாடகாவின் கூர்க்கில் உள்ள அதிசொகுசு ரிசார்ட்டான ஆரஞ்ச் கவுன்டி கூர்க்கில் தங்கியுள்ளனர். இது யாருக்கு சொந்தமானது என்பதில் பெரும் விவாதம் நடைபெற்று வருகிறது.

ரூ33,000

ரூ33,000

புதுவை விண்ட் ப்ளவர் ரிசார்ட்டை புக் செய்து தரும் நிறுவனம்தான் கூர்க் ரிசார்ட்டையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. புதுவை சொகுசு ரிசார்ட்டில் ஒரு நாளைக்கு ரூ9,000தான் கட்டணம். ஆனால் கூர்க் அதிசொகுசு ரிசார்ட்டில் ஒரு இரவுக்கான கட்டணம் ரூ33,000-ல் இருந்து தொடங்குகிறது.

5 வகையான அறைகள்

5 வகையான அறைகள்

ஆரஞ்ச் கவுன்டி கூர்க்கிள் அதிசொகுசு ரிசார்ட்டில் 5 வகையான அறைகள் உள்ளன. ஒரு இரவு கட்டணம் ரூ33,000; ரூ39.000; ரூ47,000; ரூ49,000 மற்றும் ரூ67,000. இதில் தினகரன் எம்.எல்.ஏக்கள் எந்த அறையை தேர்வு செய்துள்ளனர் என தெரியவில்லை.

கட்டண சலுகை

கட்டண சலுகை

அதேநேரத்தில் 2 அல்லது 3 நாள் இங்கேயே தங்கும்போது கட்டண சலுகையும் கிடைக்கிறது. ரூ33,000 அறையை 3 இரவுகளுக்கு புக் செய்தால் ரூ62,000கட்டணம். ரூ67,000 அறையை 3 இரவுகளுக்கு புக் செய்தால் ரூ1,27,000 கட்டணம். வார இறுதி நாட்களில் இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

வார நாட்களில் கொஞ்சம் குறைவு

வார நாட்களில் கொஞ்சம் குறைவு

வார நாட்களில் இந்த அறைகளுக்கு ரூ29,7000 முதல் ரூ60,300 வரை கட்டணமாக பெறப்படுகிறது. இந்த சொகுசு ரிசார்ட்டில் ராஜவாழ்க்கையாக அனைத்து வசதிகளுடன் தங்க முடியுமாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+