பார்வையற்ற குழந்தைகளை அடித்துத் துன்புறுத்திய கொடூர ஆசிரியர்
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில், பார்வையற்ற மாணவர்கள் மீது ஆசிரியர்கள் கொடூரமாக அடித்து துன்புறுத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை பதிவு செய்து வெளியாகியுள்ள வீடியோவைப் பார்க்கக் கூட நமக்கெல்லாம் சக்தியில்லை என்பதுதான் உண்மை.
கிட்டதட்ட 3 நிமிடங்களுக்கு, 3 கண் பார்வையற்ற குழந்தைகளை அடிக்கின்றார் ஆசிரியர். அந்த ஆசிரியரும் பார்வையற்ற மனிதர் என்பது குறிப்பிடத்தக்கது. அக்குழந்தைகள் அவரிடம் கெஞ்சுகின்றனர், அழுகின்றனர், பயப்படுகின்றனர். ஆனாலும், அவர் அடிப்பதை நிறுத்தவில்லை.
{ventuno}
ஒரு குழந்தையின் தலையை தரையில் வைத்து தேய்க்கின்றார் ஆசிரியர். இன்னொரு குழந்தை அவருக்கு உதவுகின்றது.
அக்குழந்தைகள் அனைவருமே 10 வயதிற்கும் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்போனை உபயோகித்து இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. காக்கிநாடா போலீசார் இதுபற்றி கூறியபொழுது, "அந்த ஆசிரியர் கீரின்பீல்ட் பள்ளியை பார்வையற்ற குழந்தைகளுக்காக நடத்தி வருகின்றார். அவரை கைது செய்துவிட்டோம்" என்று தெரிவித்துள்ளனர்.
மாநிலத்தின் குழந்தைகள் நல ஆணையம் இக்கொடூர சம்பவம் பற்றி தனியாக விசாரித்து வருகின்றது. இப்பள்ளிக்கு நிதி அளித்தவர்கள் பற்றி தெளிவாகத் தெரியவில்லை. மேலும், இப்பள்ளி ஒரு டிரஸ்ட் மூலமாக இயங்கி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இப்பள்ளியில் கிட்டதட்ட 62 குழந்தைகள் அங்கேயே தங்கி படித்து வருகின்றனர். விரைவில் அனைவரும் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்வையற்ற குழந்தைகளை இப்படி ஆசிரியரே அடித்துத் துன்புறுத்திய சம்பவம் மனிதத்தின் கேலிக்கூத்து நிலையைத்தான் பறைசாற்றுகின்றது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications