கணவர் என்ன செய்கிறார்.. ஜன்னலில் எட்டி பார்த்த மனைவி.. அதிர்ச்சி.. அடுத்து நடந்த கொடுமை!
இளம் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்
கான்பூர்: கணவன் என்ன செய்கிறார் என்று ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார் மனைவி.. பிறகு அலறியே விட்டார்.. தன்னுடைய புடவையில் தூக்கில் தொங்கி கொண்டிருந்த கணவனை பார்த்ததும், மனைவியும் இன்னொரு ரூமுக்குள் ஓடிப்போய் தூக்கு போட்டு கொண்டார்.. இந்த இரு சடலங்களுக்கு நடுவில் இவர்களின் ஒரு வயது குழந்தை உட்கார்ந்து கதறி அழுத சம்பவம் நெஞ்சை உருக்குவதாக உள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பிரின்ஸ்.. இவர் சந்திரிகா என்ற பெண்ணை காதலித்தார்.. ஆனால் வீட்டில் அந்த பெண்ணை கல்யாணம் செய்ய சம்மதம் தரவில்லை.

அதனால் 2 வருஷங்களுக்கு முன்பு பெற்றோரை எதிர்த்து சந்திரிகாவை கல்யாணம் செய்து கொண்டார்.. இதனால் பிரின்சுடன் அவர் குடும்பத்தார், உறவினர்கள் யாருமே பேசுவது இல்லை. இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை ஒன்று இருக்கின்றது.
புதுமணம் செய்த பிறகு ஒரு வீட்டினை வாடகை எடுத்து குடிபோனார் பிரின்ஸ்..மருந்து நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.. இந்த சமயத்தில்தான் லாக்டவுன் போடப்பட்டு விட்டது.. வேலை இல்லாமல் போனது.. கையில் காசு இல்லை.
இதனால் குடும்பத்தில் தம்பதிக்குள் நிறைய சண்டை வந்தபடியே இருந்தது. அப்படித்தான் நேற்றும் சண்டை போட்டுள்ளனர்.. ஆனால் வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவராலும் ஆவேசம், ஆத்திரத்தை தாங்கி கொள்ள முடியவில்லை.. ஒருகட்டத்தில் பிரின்ஸ் ரூமுக்குள் ஓடிப்போய் கதவை சாத்தி கொண்டார்.
ரொம்ப நேரமாக ரூமை விட்டு வெளியே வராததால், அவர் என்ன செய்கிறார் என்பதை பார்க்க சந்திரிகா ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார்.. அப்போதுதான் பிரின்ஸ் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.. அவர் தொங்கி கொண்டிருந்தது சந்திரிகாவின் புடவையில்!
இதை பார்த்து அலறி, உடனடியாக தன் சொந்தக்காரர்களுக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார்.. பிறகு இன்னொரு ரூமுக்குள் ஓடிப்போய் கதவை அடைத்து அவரும் தற்கொலை செய்து கொண்டார்.. ஆளுக்கு ஒரு பக்கம் ஓடிப்போய் தற்கொலை செய்து கொண்டதால், அப்பா, அம்மா இல்லாமல் குழந்தை நடுவீட்டில் உட்கார்ந்து ரொம்ப நேரமாக அழுது கொண்டே இருந்திருக்கிறது.
உறவினர்கள் வந்து பார்த்துதான் போலீசுக்கு தகவல் சொல்லி உள்ளனர்.. அவர்கள் விரைந்து வந்து சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்ததுடன் விசாரணையும் நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications