இந்து பையனுடன் காதல்.. வீட்டை விட்டு வெளியேறிய முஸ்லீம் பெண்.. மரத்தில் கட்டி அடித்த கொடூரம்
இளம்பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்துள்ளனர்.
பாட்னா: இன்னமும் கூட நாட்டில் மத வெறியும், சாதி வெறியும் பிடித்து ஆட்டுகிறது. வேறு ஒரு மதத்தைச் சேர்ந்தவரை காதலித்த பாவத்திற்காக 5 மணி நேரம் மரத்தில் கட்டி வைத்து அடித்திருக்கிறார்கள் ஒரு பெண்ணை.
பீகார் மாநிலம் நவடா மாவட்டம், ராஜவுளி என்னும் கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் (முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்) பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞரை (இவர் இந்துவாம்) காதலித்தார். இருவரின் காதல் விவகாரமும் வீட்டுக்கு தெரியவர, பெண்ணை கண்டித்ததுடன், வீட்டிலேயே அறைக்குள் தள்ளி சிறை வைத்தனர்.

திருமணம் செய்தனர்
ஆனால் அந்த பெண்ணோ இளைஞரின் மீதுள்ள காதல் காரணமாக, செப்.30-ம் தேதி வீட்டிலிருந்து தப்பி ஓடியுள்ளார். அன்று இரவு கிராமத்தில் கரண்ட் போயுள்ளது. இதை சாக்காக வைத்துதான் பெண் ஓடியுள்ளார். நேராக அந்த இளைஞனை சந்தித்து, இப்படியே விட்டால் நம்மை பிரித்து விடுவார்கள் என்று சொல்லி அழுதிருக்கிறார். பின்னர் இருவரும் சேர்ந்து முடிவெடுத்து திருமணமும் செய்து கொண்டனர்.

பெண்ணை பற்றி புகார்
இதனிடையே வீட்டில் பெண் இல்லாததால் குடும்பத்தினர் ஊர் முழுக்க தேடி ஆரம்பித்தனர். கொஞ்ச நேரத்திலேயே இருவரையும் கையும் களவுமாக பிடித்து விட்டனர். இப்போது பெண்ணின் குடும்பத்தாருக்கு ஆத்திரம் இன்னும் அதிகமாகிவிட்டது. பெண்ணை தரதரவென ரோட்டில் இழுத்துக் கொண்டே வந்தனர். ஊர்நடுவே வைத்தே அந்த கிராம பஞ்சாயத்தை கூட்டினர். ஊர் பெரியவர்கள் ஓடி வந்தார்கள். அப்போது பெத்த பெண்ணை பற்றி பெற்றோரே ஒன்றுவிடாமல் ஊர்க்காரர்கள் மத்தியில் புகார் செய்தனர்.

பெற்றோர் சம்மதம்
உடனே பெரிசுகள் எல்லாம் சேர்ந்து ஒரு முடிவெடுத்தனர். அதாவது அந்த பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடிக்க வேண்டும் என்பதுதான் அந்த தீர்ப்பு. இந்த தீர்ப்பை கேட்ட பெண்ணின் பெற்றோரும் சரி என்று மண்டைய மண்டைய ஆட்டினர். அடுத்ததாக பெண்ணை ஊர் மத்தியில் உள்ள மரத்தில் கட்டினார்கள். பின்னர் சரமாரியாக அடிக்க ஆரம்பித்தனர். இதில் முதல் அடி யார் அடித்தது தெரியுமா? சாட்சாத்... அந்த பெண்ணை பெற்ற தகப்பன்தான்!!

கதறி துடித்த மகள்
அடுத்ததாக ஊர்மக்கள் அந்த பெண்ணை வெளுத்து வாங்கினர். முரட்டு மனிதர்களின் சவுக்கு அடியை அந்த பெண்ணால் தாங்கவே முடியவில்லை. கதறினாள்... துடித்தாள்... மகள் துடிப்பதை பெற்றோர் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்த காட்சியை ஒருவர் வீடியோ எடுத்தார். அதனை இணையத்திலும் பதிவிட்டு விட்டார். இதுபற்றி அந்த பெண்ணின் அப்பாவிடம் கேட்கப்பட்டதற்கு, "பெண் எங்கள் சாதிக்காரரனைதான் கல்யாணம் செய்துக்கணும், இன்னொரு சாதிக்காரனை விரும்பினதுக்குத்தான் இந்த அடி" என்கிறார் கூலாக. மாநில அரசு இதுவரை இதைபற்றி வாயை திறக்கவில்லை.

திருந்தாத ஜென்மங்கள்
இப்படிப்பட்ட காப் பஞ்சாயத்துக்களுக்குத்தான் உச்சநீதிமன்றம் கடிவாளம் போட்டு... மண்டையில் கொட்டி... வாலை சுருட்டி வைத்து கொள்ளுமாறு எச்சரித்தது. ஆனாலும் வடமாநில கிராமங்களில் இந்த காப் பஞ்சாயத்துக்களின் அட்டகாசம் குறைந்தபாடில்லை. இப்படிப்பட்ட சாதி மிருகங்கள் இந்த ஜென்மத்தில் திருந்தவும் வாய்ப்பில்லை. என்னதான் நாட்டில் வாய்கிழிய சாதி இல்லை என்று பேசிக் கொண்டிருந்தாலும், மறுபக்கம் சாதிகள் இன்னும் அழுத்தமாக பதிக்கப்பட்டுத்தான் வருகிறது. கண்ணுக்குதெரியாத கிருமி போல.. உயிரை கொல்லும் வைரஸ் போல!
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications