அட பக்கி.. பெண்ணிடம் இப்படியா வீரத்தைக் காட்டுவது.. "ஷாக்" வீடியோ!
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உடற்பயிற்சி கூடம் ஒன்றில் ஆண் ஒருவர் இளம்பெண்ணை தாக்கும் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்தூர்: ஜிம்மில் இளைஞர் ஒருவரின் செயல்பாடுகள் குறித்து புகார் சொன்னதற்காக இளம்பெண்ணை அந்த இளைஞர் சரமாரியாக தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பிரபல ஜிம் ஒன்றில் நடந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. அதில், ஒரு இளம்பெண் இளைஞர் ஒருவரிடம் அவரின் செயல்பாடுகள் குறித்து ஏதோ கூறுகிறார். இதனால் கோபமடைந்த அந்த இளைஞர் பெண்ணின் தலையில் ஓங்கி ஒரு அடி அடித்ததில் அந்தப் பெண் வலி தாங்காமல் தலையை பிடித்துக்கொண்டு கீழே உட்காருகிறார்.

இதனையடுத்து உடற்பயிற்சிக் கூடத்தில் இருந்த சக ஆண்கள் அருகில் வந்து என்ன விஷயம் என்று கேட்பதற்குள் அந்த இளைஞர் மீண்டும் அந்தப் பெண்ணை தனது காலால் ஓங்கி அவருடைய முட்டிக்காலில் ஒரு உதை விடுகிறார். இதனால் அந்தப் பெண் மேலும் வலி பொறுக்க முடியாமல் கதறும் காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளது.
ஒரு பெண்ணை இந்த அளவிற்கு மூர்க்கத்தனமாக தாக்குவதற்கு என்ன காரணம் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆனால் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும் இளம்பெண் ஒருவர் தாக்கப்படும் காட்சிகள் அனைவர் மனதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி விமான நிலையம் அருகில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் பெண் பணியாளரின் சேலையை பிடித்து இழுத்த அதிகாரி குறித்த சிசிடிவி காட்சிகள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதே போன்று இன்று வெளியாகியுள்ள இந்தக் காட்சிகள் பெண்களுக்கும் எங்குமே பாதுகாப்பு இல்லையோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications