For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சட்டசபை வளாகத்தில் குஜராத் உள்துறை அமைச்சர் மீது செருப்பு வீச்சு.. இளைஞர் கைது

குஜராத் சட்டசபை வளாகத்தில் உள்துறை அமைச்சரின் மீது செருப்பு வீசிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

காந்திநகர்: குஜராத் சட்டசபை வளகாத்திற்குள்ளேயே இளைஞர் ஒருவர் உள்துறை அமைச்சர் பிரதீப் சின்ஹா ஜடேஜா மீது செருப்பு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குஜராத் சட்டசபையில் அம்மாநில உள்துறை அமைச்சர் பிரதீப் சின்ஹா ஜடேஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் உள்துறை அமைச்சர் மீது செருப்பை வீசினார்.

Youth attacks Gujarat Home Minister with shoe

இதனால் உள்துறை அமைச்சர் ஜருக்கானார். இருப்பினும் அவர் மீது செருப்பு படவில்லை. இதையடுத்து அந்த இளைஞரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரைணையில் அவரது பெயர் கோபால் இட்டாலியா என்பது தெரியவந்தது.

மதுபான மாஃபியா குறித்து அந்த இளைஞர் உள்துறை அமைச்சகத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அந்த புகார் உள்துறை அமைச்சர் பிரதீப் சின்ஹா ஜடேஜா புறக்கணித்தாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமைடைந்த அந்த இளைஞர் அமைச்சர் மீது செருப்பை வீசியுள்ளார். இந்த சம்பவத்தால் குஜராத் சட்டசபை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மீது காலணி வீச முய்ற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காந்திநகரில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது காலணி வீச முயற்சி செய்த இளைஞர் பிடிப்பட்டார்.

English summary
A youth attacked Gujarat Home Minister Pradip Jadeja with shoe. A man who has been identified as Gopal Italia hurled shoe at the minister while he was addressing to reporters outside Gujarat legislative assembly complex in Gandhinagar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X