“ஷாக்" வீடியோ.. கங்கை இந்துக்களுக்கு மட்டுமே! முஸ்லிம்களை விரட்டிய இளைஞர் - ஆதரவாக வந்த பாஜக தலைவர்
டேராடூன்: கங்கை நதியை பார்வையிட சென்ற முஸ்லிம்களிடம், இது இந்துக்களுக்காக நதி என்று சொல்லி இளைஞர் விரட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் ஹரிதுவாரில் உள்ள மஹாராஜா அக்ராசென் காட் என்ற பகுதி அருகே கங்கை நதி கடந்து செல்கிறது. சுற்றுலா பயணிகள் வந்துபோகும் பகுதியான இங்கு அனைத்து மதத்தினரும் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்லாமியர்கள் இப்பகுதிக்கு கங்கை நதியை பார்வையிடுவதற்காக சென்று இருக்கிறார்கள்.

அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர் அவர்களை தடுத்து நிறுத்தி திரும்பி செல்லுமாறு மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரிடம் இஸ்லாமியர்கள் ஏன் என்று கேட்டபோது "இந்துக்கள் மட்டுமே இப்பகுதிக்கு வர வேண்டும். மற்றவர்களுக்கு இங்கு இடமில்லை. வெளியேறுங்கள். உங்களை இனி நான் இப்பகுதியில் பார்க்கவே கூடாது." என்று தெரிவித்து உள்ளார்.
அவரிடம் அங்கு வந்த இஸ்லாமிய பெண் ஒருவர் கடுமையாக வாக்குவாதம் செய்யும் காட்சிகளும் அதில் பதிவாகி உள்ளன. ஆனால், அவர் சொல்வதையெல்லாம் கேட்காமல் இளைஞர் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்கிறார். இதனால் அந்த பெண்ணை அவருடன் வந்தவர்கள் சமாதானம் செய்து அழைத்து சென்றார்கள்.
இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இது தொடர்பாக எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே மிரட்டல் விடுத்த இளைஞர் நடந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.
அதில் அவர் பேசியதாவது, "முஸ்லிம் குடும்பம் கங்கையில் குப்பைகளை வீசியது. அவர்களிடம் மத ரீதியாக பாகுபாடு காட்டும் எண்ணம் எனக்கு இல்லை என்றார். இதுகுறித்து பேசிய நிலைய அதிகாரி நிதேஷ் சர்மா, "இந்த சம்பவம் சில நாட்களுக்கு முன் மஹாராஜா அக்ராசென் காட்டில் நடைபெற்றது.
இது ஜவால்பூர் காவல் நிலைய கட்டுப்பட்டிற்குள் வரும் பகுதியாகும். நகரத்தின் மைய பகுதியில் இந்த இடம் அமைந்து இருக்கிறது. காவல் நிலையத்துக்கும் இதுகுறித்து புகார் செல்லவில்லை. முஸ்லிம் குடும்பத்தை அங்கிருந்து வெளியேற்றிய நபரும் இது தொடர்பாக விளக்கமளித்து உள்ளார்.
In India, even Rivers have now religion - In Haridwar, a Muslim family is being driven away from going to the Ganges River, saying “Only Hindus are allowed here” pic.twitter.com/jEJBeYKxYt
— Ashok Swain (@ashoswai) June 19, 2023
இதுகுறித்து அப்பகுதி அதிகாரிகள் தெரிவிக்கையில், ஆற்றுக்கு மக்கள் செல்வதில் மதரீதியாக எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்றனர். இங்குள்ள மஹாராஜா அக்ராசென் காட் சமிதியின் பொது செயலாளராக பாஜகவை சேர்ந்த விஷால் கார்க் என்பவர் பதவியில் இருந்து வருகிறார்.
முஸ்லிம்களை விரட்டிய இளைஞரின் செயலுக்கு ஆதரவளித்து பேசிய அவர், முஸ்லிம்கள் கங்கையை அசுத்தப்படுத்தியதாலே அவர்கள் விரட்டப்பட்டனர் என்றார். கங்கை தங்களுக்கு புனிதமான நதி என்றும் அதை அசுத்தப்படுத்த அனுமதிக்க மாட்டோம் எனவும், இந்துக்கள் கங்கையை அசுத்தப்படுத்தவும் அனுமதிப்பது இல்லை என அவர் தெரிவித்தார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications