வாலிபர் தற்கொலை: 'ஏப்ரல் ஃபூல்' ஆக்க நினைப்பதாக கருதிய பெற்றோர்
கான்பூர்: உத்தர பிரதேச மாநிலத்தில் வாலிபர் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட செய்தியை போலீசார் தெரிவித்தபோது அவர்கள் முட்டாள் தினத்தில் தங்களை ஏமாற்ற பார்க்கிறார்கள் என்று அவரின் பெற்றோர் நினைத்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஜலாவ்ன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அன்கித்(24). அவர் கடந்த 1ம் தேதி அதாவது முட்டாள்கள் தினத்தன்று கான்பூருக்கு சென்றுள்ளார். அங்குள்ள கோவிந்த்புரி ரயில் நிலையம் அருகே ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் அன்கித்தின் பெற்றோருக்கு போன் செய்து அவர் தற்கொலை செய்து கொண்ட தகவலை தெரிவித்தனர். ஆனால் அவர்களோ முட்டாள்கள் தினத்தில் எங்களை முட்டாளாக்க முயற்சி செய்கிறீர்களா என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டனர். போலீசார் இரண்டு முறை போன் செய்தும் அவர்கள் நம்பவில்லை.
ரயில்வே போலீசார் மீண்டும் மூன்றாவது முறையாக தகவல் தெரிவித்தபோது தான் அவர்கள் அதை நம்பி கான்பூருக்கு வந்தனர். அன்கித் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் தெரியவில்லை.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications