கவுரவக் கொலை... காதலன் உடலை துண்டுகளாக்கி நாய்க்கும் நரிக்கும் போட்ட காதலி வீட்டார்
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில், மகள் தனது காதலனைக் கரம் பிடித்தால் தங்களது குடும்பக் கவுரவம் பாழாகி விடும் என பயந்த பெண் வீட்டார், மகளின் காதலனைக் கொன்று, உடலைத் துண்டங்களாக்கி நாய்க்கும், நரிக்கும் உணவாகப் போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம், பஸ்தி மாவட்டத்தில் உள்ள சடவுனா கிராமத்தை சேர்ந்த 20 வயது இளைஞர் சுபாஷ். இவர் பக்கத்து கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.
மகளின் காதல் விவகாரம் அறிந்த வீட்டார், பெண்ணை வீட்டுச் சிறையில் அடைத்துள்ளனர். இதனால், காதலியை வெளி இடங்களில் காண இயலாமல் தவித்த சுபாஷ் திருட்டுத்தனமாகக் காதலியை அவரது வீட்டிலேயே சந்திக்க ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில், வழக்கம் போல கடந்த ஞாயிறன்றும் காதலியைச் சந்திக்கச் சென்றுள்ளார் சுபாஷ். ஆனால், விடிந்தும் வீடு திரும்பாத மகனை ஊர் முழுவதும் தேடியுள்ளனர் சுபாஷின் பெற்றோர்.
இதற்கிடையே, நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் வேளையில் குடும்பத்தார் அசந்திருந்த வேளையில் வீட்டுக் காவலில் இருந்து தப்பியோடி வந்த அந்த இளம்பெண், சுபாஷின் மாமாவை சந்தித்து, சுபாஷ் கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார்.
சற்றும் தாமதிக்காமல் அவர், அப்பெண்ணை அழைத்துக் கொண்டு காவல் நிலையம் சென்றுள்ளார். அங்கே, போலீசாரிடம் அப்பெண் அளித்த வாக்குமூலத்தில், ‘ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் எங்கள் வீட்டுக்குள் சுபாஷ் நுழைந்த போது, சத்தம் கேட்டு விழித்த எனது அம்மா அவரை ஓட விடாமல் பிடித்துக் கொண்டு கூச்சலிட்டார். அவளது கூச்சலை கெட்டு எழுந்து வந்த என் அண்ணணும் அவரது மைத்துனரும் சேர்ந்து வீட்டில் இருந்த வெட்டுக் கத்தியால் சுபாஷை சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.
அவரது மூச்சு நின்று, உயிர் பிரிந்த பிறகும் வெறி தணியாத அவர்கள் சுபாஷின் கை, கால், தலை ஆகியவற்றை தனித்தனியாக வெட்டி எடுத்தனர். அவற்றை சிறு, சிறு துண்டங்களாக நறுக்கி, நாய், நரி போன்றவை தின்னட்டும் என்று எங்கள் வீட்டை ஒட்டியுள்ள வயலில் வீசி கொலைக்கான தடயத்தையும் மறைத்து விட்டனர்' எனத் தெரிவித்துள்ளார்.
அப்பெண்ணின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட போலீசார் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று அவளது தாயார், அண்ணன் கண்ஹையா ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.
போலீசாரின் விசாரணையில், குற்றத்தை ஒப்புக் கொண்டு அவர்கள் அளித்த வாக்குமூலத்தை பதிவு செய்து, இந்த படுகொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களையும் பறிமுதல் செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் கண்ஹையாவின் மைத்துனரை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, வெட்டி வீசப்பட்ட சுபாஷின் உடல் முழுமையாக கிடைக்காததால் வயல் வெளியில் நாய்களும், நரிகளும் தின்று விட்டு மிச்சமாகி விட்டுச் சென்ற எலும்பு துண்டங்களை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர் போலீசார்.
அவை சுபாஷின் உடல் பகுதி தான் என்பது உறுதியான பிறகு, குற்றவாளிகள் மீது மேலும் நடவடிக்கை எடுக்க அவர்கள் முடிவு செய்துள்ளனராம்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications