ரூ. 5,000 இ.பி. பில் கட்டாததால் வாக்குவாதம் - தந்தையைக் குத்திக் கொன்ற 19 வயது மகன் கைது
டெல்லி: மின்சாரக் கட்டணம் கட்டாமல் இருந்ததைக் கண்டித்த தந்தையைக் குத்திக் கொன்ற மகனைப் டெல்லிப் போலீசார் கைது செய்துள்ளனர்.
தலைநகர் டெல்லியின் ஸ்வரூப் நகர் பகுதியைச் சேர்ந்த முட்டை வியாபாரி கோபால் (46). இவரது இளைய மகன் பிஜேந்தர் (19). கல்வியைப் பாதியில் கைவிட்ட பிஜேந்தர் வேலை எதற்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார்.
இதனை அவ்வப்போது கண்டித்து வந்துள்ளார் கோபால். இந்நிலையில், பிதேந்தரை சமீபத்தில் ரூ. 5 ஆயிரம் மின்சாரக் கட்டணம் கட்டச் சொல்லியுள்ளார் கோபால். ஆனால், பிஜேந்தர் அதைக் கட்டவில்லை.
இது தொடர்பாக கடந்த ஞாயிறன்று இரவு தனது மகனைத் திட்டியுள்ளார் கோபால். வாக்குவாதம் முற்றிய நிலையில் கத்தியால் கோபாலின் மார்புப் பகுதியில் சரமாரியாகக் குத்தியுள்ளார் பிஜேந்தர். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கோபால் பலியானார்.
கணவரை மகன் கத்தியால் குத்துவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கோபாலின் மனைவி இடையில் புகுந்து அதனைத் தடுக்க முயற்சித்துள்ளார். இதில், அவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கோபாலின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். தலையில் பலத்த காயமடைந்த கோபாலின் மனைவி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சம்பவம் நடந்த சில மணி நேரத்திற்குள்ளாகவே தலைமறைவான பிஜேந்தரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications