காதலியை கல்லால் அடித்துக் கொன்ற காதலன்...பயத்தில் தானும் விஷம் குடித்து தற்கொலை

Subscribe to Oneindia Tamil

நாசிக்: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மலைப்பகுதியில் காதலியை கல்லால் தாக்கி கொலை செய்த காதலன் பின்னர் பயத்தில் தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டம், சாத்பூரில் உள்ள மஹதா காலனியில் வசித்து வருபவர் திலிப் வாமன் ஆகவ் (20). இவர் அதே பகுதியைச் சேர்ந்த கோமல் பிரகாஷ் சால்டே (19) என்ற பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தனியாக பேச வேண்டும் என்று கூறி, அந்தப் பெண்ணை அஞ்னேரி மலைப்பகுதிக்கு நேற்று அழைத்து சென்றார்.

Youth kills his lover in Nashik

மலையின்மீது அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த திலிப், கோமலை கல்லால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார். இதைக் கண்டு பயந்துப்போன திலிப் பின்னர் தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

உள்ளூர்வாசிகள் தெரிவித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+