ஒரு தலைக்காதல்... காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி மீது காரை ஏற்றி கொலை முயற்சி
திருவனந்தபுரம்: கேரளாவில் காதலை ஏற்றுக் கொள்ள மறுத்த பெண் மீது, இளைஞர் ஒருவர் காரை மோதி கொல்ல முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலை ஏற்றுக் கொள்ளாத பெண்கள் மீது ஆசிட் வீசுவது, கத்தியால் குத்துவது உள்ளிட்ட வன்முறைகள் சமீப காலமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில், கேரளாவில் இளைஞர் ஒருவர் தனது காதலை ஏற்றுக் கொள்ள மறுத்த பெண் மீது காரை ஏற்றிக் கொல்ல முயற்சித்துள்ளார்.
கேரளாவில் திரிசூர் அருகே அரிம்பூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி நேற்று காலை 10 மணி அளவில் கோவிலுக்கு சென்று விட்டு வெளியில் வந்துள்ளார். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்தை நேரில் பார்த்தவர்கள் இது எதிர்பாராமல் நடந்த விபத்து போல் தெரியவில்லை, வேண்டுமென்றே அப்பெண் மீது கார் மோதியது என போலீசில் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தது கரளம் பகுதியைச் சேர்ந்த ஷெபின் என்பது கண்டுபிடிக்கப் பட்டது. விபத்து ஏற்படுத்திய காரைக் கண்டுபிடித்துள்ள போலீசார், ஷெபினைத் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
ஷெபின் காயமடைந்த பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும், அப்பெண் ஷெபினின் காதலை ஏற்றுக் கொள்ள மறுத்ததால் இந்த கொலை முயற்சி நடந்துள்ளதாகவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications