டிவியை முதுகில் மாட்டிக் கொண்டு தேர்தல் முடிவுகளை 'லைவ்' செய்த இளைஞர்!

Subscribe to Oneindia Tamil

லோக்சபா தேர்தல் முடிவுகள்தான் இன்று ஒவ்வொரு இந்தியரின் ஹாட் டாப்பிக். காலையிலிருந்தே தேர்தல் முடிவுகளை பார்ப்பதற்காக பலரும் ஆவலோடு தங்களது பணிகளை திட்டமிட்டு செய்தனர்.

வீடு, அலுவலகம், வர்த்தக நிறுவனங்கள், பஸ், ரயில் நிலையங்கள் என அனைத்திலுமே தேர்தல் முடிவுகள் குறித்த பேச்சுதான் இருந்தது. மேலும், தேர்தல் செய்திகளை மக்கள் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர். இதற்காக, செய்தி நிறுவனங்களும், தொலைக்காட்சி நிறுவனங்களும் சிறப்பு ஏற்பாடுகளை செய்து முடிவுகளை உடனுக்குடன் வழங்கி வருகின்றன.

youth wears tv on his back shows election results for others

பெரும்பாலானோர் டிவி முன்பு அமர்ந்து இடைவிடாது தேர்தல் முடிவுகளை பார்த்து வருகின்றனர். டிவி பார்க்க முடியாதவர்கள் மொபைல்போனில் தேர்தல் முடிவுகளை தெரிந்து கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகளை பிற பயணிகள் எளிதாக தெரிந்து கொள்ளும் விதத்தில், மும்பை மெட்ரோ ரயிலில் பயணிக்க வந்த இளைஞர் ஒருவர் வித்தியாசமான முயற்சியை செய்துள்ளார். அவர் தனது வீட்டில் இருந்த எல்சிடி டிவியை பெல்ட் போட்டு முதுகில் கட்டிக் கொண்டு வந்தார்.

மேலும், அவர் கட்டியிருந்த டிவியில் தேர்தல் முடிவுகளை பின்னால் வந்த பலரும் பார்த்து தெரிந்து கொண்டதுடன், ஆச்சரியத்திலும் மூழ்கினர். இதனை பார்த்த ஒருவர் டிவிட்டரில் அந்த படத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+