Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யூடியூப் சேனல்களுக்கு ஆப்பு.. 11 ஆயிரம் சேனல்களை நீக்கிய கூகுள்.. இந்த ஆண்டில் மட்டும் இவ்வளவா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தவறான தகவல்களை பரப்புவதைத் தடுக்கும் வகையில் யூடியூப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒரிஜினல் வீடியோக்களுக்கு மட்டுமே பணம், தரம் குறைந்த வீடியோக்களுக்கு பணம் அளிக்கப்படாது என பல்வேறு விதிமுறைகள் கடந்த ஜூலை 15 முதல் அமல்படுத்தப்பட்டிருந்து. இதைத்தொடர்ந்து, சீனா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரம் சேனல்களை கூகுள் நீக்கியுள்ளது.

யூடியூப் சமூக வலைதளம் மூலமாக பலரும் இப்போது கன்டென்ட் கிரியேட்டர்களாக மாறியுள்ளனர். ஏராளமானோர் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். யூடியூபில் சேனல்களைத் தொடங்கி வீடியோ பதிவேற்றம் செய்து, குறிப்பிட்ட பார்வையாளர்களைப் பெற்றால் அதற்கு யூடியூப் நிறுவனம் பணம் வழங்கி வருகிறது. இதில் பல்வேறு வித்தியாசமான வீடியோக்களைப் பதிவு செய்து நடிகர்கள் அளவிற்கு புகழைப் பெற்று லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர்.

youtube-channels-of-china-and-russia-removed-by-google

புதிய விதிமுறை

இந்நிலையில், யூடியூபர்களின் தலையில் புதிய இடியை இறக்கியிருந்தது அந்நிறுவனம். அதாவது ஜூலை 15 முதல் தங்களின் விதிமுறைகளைப் பூர்த்தி செய்யாத யூடியூப் சேனல்கள், பணம் வழங்கும் யூடியூப் பார்ட்னர் திட்டத்தில் இருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

வீடியோக்களுக்கு பணம்

புதிய படைப்புகளை உருவாக்கும் ஒரிஜினல் வீடியோக்களுக்கு மட்டுமே வருமானம் வழங்கப்படும். அந்த வீடியோக்கள் மட்டுமே விளம்பரப்படுத்தப்படும். மீண்டும், மீண்டும் பதிவேற்றப்படும் வீடியோக்கள், ஒன்றைப் போலவே மற்றொன்றை உருவாக்கும் வீடியோ, தரம் குறைந்த வீடியோக்களுக்கு பணம் அளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தவறான தகவல்

இந்நிலையில், தவறான தகவல்கள்கள் பரப்பப்படுவது, பிரசாரத்தை தடுக்கும் வகையில் 11 ஆயிரம் யூடியூபர் சேனல்களை கூகுள் நீக்கியுள்ளது. இந்த சேனல்களில் பெரும்பாலானவை சீனா மற்றும் ரஷ்யாவுக்குச் சொந்தமானது என்றும், அமெரிக்க கொள்கைகளை விமர்சிக்கும் வீடியோக்கள் வெளியிட்டு வந்த அந்த 7,700க்கும் மேற்பட்ட சேனல்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா, ரஷ்யா யூடியூப்

யூடிப்பில் நீக்கப்பட்ட பெரும்பாலான சேனல்கள் சீனா மற்றும் ஆங்கில மொழியில் உள்ளன. அவை சீன அதிபர் ஜின்பிங்கிற்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யும் வகையில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இதுதவிர 2 ஆயிரம் யூடியூப் சேனல்கள் ரஷிய மொழி வீடியோக்களை வெளியிட்டுள்ளன. அந்த சேனல்களில் ரஷியாவுக்கு ஆதரவு தெரிவித்தும், நேட்டோ, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டுள்ளன.

அச்சுறுத்தல்

இணைய அச்சுறுத்தலுக்கு எதிராக கூகுள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், யூடியூப் தளத்தை எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாமல் நேர்மையானதாக வைத்துக் கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யூடியூப் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் 20 சேனல்களை கூகுள் நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற சேனல்கள்

சீனா, ரஷ்யா மட்டுமல்லாமல் ஈரான், அஜர்பைஜான், துருக்கி, கானா உள்ளிட்ட மற்ற நாடுகளைச் சேர்ந்த சேனல்களும் நீக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 30 ஆயிரம் யூடியூப் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+