ஜெகன் மோகன் ரெட்டி கட்சிக்கு நிரந்தர சின்னம் சீலிங் ஃபேன்: தேர்தல் கமிஷன் உத்தரவு
ஹைதராபாத்: ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு சீலிங் ஃபேன் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்கி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 2011-ம் ஆண்டு மார்ச் 12-ந் தேதி தொடங்கப்பட்டது. அதே ஆண்டிலேயே மே மாதம் கடப்பா நாடாளுமன்ற தொகுதி மற்றும் புலிவெந்தலா சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

கடப்பா தொகுதியில் ஜெகன்மோகன் ரெட்டியும், புலிவெந்தலா தொகுதியில் அவரது தாயார் விஜய லட்சுமியும் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்று சாதனை படைத்தனர். தேர்தலில் அவர்கள் சீலி ங்மின்விசிறி சின்னத்தை தேர்ந்து எடுத்தனர்.
பின்னர் 2012ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற இடைத் தேர்தலில் அக்கட்சி வேட்பாளர்கள் சீலிங் மின்விசிறி சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் வர இருக்கும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களின் போது சீலிங் மின்விசிறி சின்னத்தையே ஒதுக்க வேண்டுமென அக்கட்சி உறுப்பினர் கே. சிவகுமார் மத்திய மற்றும் மாநில தேர்தல் கமிஷனருக்கு கடிதம் எழுதினார்.
இதையடுத்து ஓய்.எஸ். ஆர். காங்கிரஸ் கட்சிக்கு சீலிங்மின் விசிறி சின்னம் நிரந்தரமாக ஒதுக்கி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. இந்த தகவலை மத்திய தேர்தல் ஆணையம் மாநில அதிகாரிக்கும் ஒய்.எஸ்.ஆர் கட்சி அலுவலகத்திற்கும் கடிதம் மூலம் அனுப்பி உள்ளது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications