பாடிகார்ட் நடிகை ஹசல் கீச்சுடன் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் “டேட்டிங்”?
மும்பை: பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், இங்கிலாந்து மாடல் அழகியும் பாலிவுட் நடிகையுமான் ஹசல் கீச்சுடன் டேட்டிங் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், தற்போது ஐபிஎல் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற போது, அதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்பட்டவர் யுவராஜ் சிங். கிரிக்கெட்டில் கொடி கட்டிப் பறந்த காலங்களிலேயே அவர் நடிகைகளுடன் இணைத்து பரபரப்பாக பேசப்பட்டார்.
இந்நிலையில், தற்போது இங்கிலாந்து மாடல் அழகியும், பாலிவுட் நடிகையுமான ஹசல் கீச்சுடன் டேட்டிங் செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முத்தப்படம்...
முதலில் மும்பை ஜூகு லவுஞ்ச் பாரில் பாலிவுட் நடிகை மினிஷா லம்பாவுக்கு யுவராஜ் சிங் முத்தம் கொடுத்த படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரித்தி ஜிந்தா...
2008 ஆம் ஆண்டு யுவராஜ் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடியபோது அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பிரித்தி ஜிந்தாவுடன் இணைத்து அவர் பேசப்பட்டார்.

லீபக்ஷியுடன்...
அதற்கு முன் மொகாபதீன் புகழ் நடிகை கிம் சர்மாவுடன் யுவராஜ் டேட்டிங் செய்வதாக கூறப்பட்டது. புற்று நோய் சிகிச்சைக்காக செல்லும் சமயத்தில் கூட, அவர் பேஷன் டிசைனர் லீபக்ஷியுடன் சேர்ந்து சுற்றுவதாக செய்திகள் வெளியாயின.

மாண்டி தக்கரர்...
தீபிகா படுகோனே, நடிகை ரியா சென் ஆகியோருடன் சேர்ந்து சுற்றுவதாகவும் யுவராஜின் பெயர் ஊடகங்களில் அடிபட்டது. இறுதியாக யுவராஜ் சிங் இங்கிலாந்து--பஞ்சாப் நடிகை மாண்டி தக்கரருடன் சேர்ந்து சுற்றுவதாக கூறப்பட்டது.

அம்மா பார்க்கும் பெண் தான்...
ஆனால், தனது தயார் பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்து கொள்ள போவதாக ஒருமுறை பேட்டி ஒன்றில் கூறி இருந்தார் யுவராஜ் சிங்.

ஹசல் கீச்...
இந்நிலையில், தற்போது மீண்டும் காதல் விவகாரத்தில் யுவராஜின் பெயர் அடிபடத் தொடங்கியுள்ளது. இம்முறை இங்கிலாந்து மாடல் அழகியும் பாலிவுட் நடிகையுமான ஹசல் கீச்சுடன் அவர் டேட்டிங் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் லண்டனில் ஒன்றாக இணைந்து சுற்றியுள்ளதாகவும், இந்தியாவிற்கு ஒன்றாக சேர்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

நண்பர்கள் தான்...
ஆனால், யுவராஜ் மற்றும் ஹசல் டேட்டிங் விவகாரத்தை, அவர்களது நெருங்கிய வட்டாரத் தகவல்கள் மறுக்கின்றன. அவர்கள் இருவரும் நண்பர்களாகப் பழகுவதாகவே அவர்கள் கூறுகின்றனர்
பாடிகார்டு...
ஹசல், சல்மான் கான் கரீனா கபூர் நடித்த பாடிகார்டு படத்தில் நடித்துள்ளார். மேக்சிமம் படத்தில் இவர் நடனம் ஆடிய ஆ அண்டே அமலபுரம் என்ற பாடல் பிரபலமானது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications