Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சல்யூட்.. குண்டு பாய்ந்தும் 2 தீவிரவாதிகளை அழிக்க உதவிய ‛ஜூம்’ நாய்.. ஜம்மு காஷ்மீரில் நெகிழ்ச்சி!

Subscribe to Oneindia Tamil

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் உடலில் 2 குண்டுகள் பாய்ந்தும் கூட தீவிரவாதிகளை அழிக்க பாதுகாப்பு படையினருக்கு‛ஜூம்' என்ற பெயர் கொண்ட நாய் உதவி செய்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் அடிக்கடி தீவிரவாத தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதனை தடுத்து தீவிரவாதிகளை அழிப்பதில் பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இதில் மத்திய அரசும் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இருப்பினும் ஜம்மு காஷ்மீரில் அவ்வப்போது தீவிரவாதிகள் சில சதித்செயல்களை நடத்தி விடுகின்றனர்.

 ரகசிய தகவல்

ரகசிய தகவல்

இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீரில் தெற்கு காஷ்மீர் பகுதியில் அனந்தநாக் மாவட்டத்தில் தாங்வாபா பகுதி உள்ளது. இங்கு தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறிது தாமதிக்காமல் உரிய திட்டமிடலுடன் பாதுகாப்பு படையினர் தாங்வாபா பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

வீட்டில் பதுங்கிய தீவிரவாதிகள்

வீட்டில் பதுங்கிய தீவிரவாதிகள்


இந்த சோதனை நேற்று காலை வரை நடந்தது. இந்த சோதனையின்போது ஒரு வீட்டில் 2 தீவிரவாதிகள் பதுங்கி இருந்தனர். பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்ததை அறிந்த அவர்கள் தப்பிக்கும் நோக்கத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக்காக தீவிரவாதிகளை நோக்கி சுட்டனர்.

2 தீவிரவாதிகள் காலி

2 தீவிரவாதிகள் காலி

இதனால் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டையின் இறுதியில் 2 தீவிரவாதிகள் குண்டு பாய்ந்து இறந்தனர். இருப்பினும் அந்த தீவிரவாதிகள் யார்? அவர்களின் பெயர்? அவர்கள் சார்ந்த அமைப்பின் பெயர்? உள்ளிட்டவை வெளியிடப்படவில்லை.

குண்டுகள் பாய்ந்தும் உதவிய ‛ஜூம்’

குண்டுகள் பாய்ந்தும் உதவிய ‛ஜூம்’

இந்நிலையில் தான் இந்த சோதனையில் 2 தீவிரவாதிகளை சுட்டுக்கொல்ல பாதுகாப்பு படையினருக்கு அவர்கள் வளர்க்கும் ‛ஜூம்' என்ற நாய் உதவியது தெரியவந்தது. மேலும் 2 குண்டுகள் உடலில் பாய்ந்தாலும் கூட நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நாய் ‛ஜூம்' உறுதியாக செயல்பட்டு தீவிரவாதிகளை வீழ்த்தியது தெரியவந்ததுள்ளது.

நடந்தது என்ன?

நடந்தது என்ன?


அதாவது காஷ்மீரில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கருதப்படும் வீடுகளில் பாதுகாப்பு படையினர் உரிய பயிற்சி பெற்ற நாய்களை அனுப்பி சோதனை செய்வார்கள். இந்த நாய்கள் தீவிரவாதிகளை அடையாளம் காண்பதோடு, அவர்களை தாக்கும் திறனும் கொண்டிருக்கும். அந்த வகையில் ‛ஜூம்' தீவிரவாதிகள் பதுங்கிய வீட்டுக்குள் சென்று மோப்பம் பிடித்து தீவிரவாதிகள் இருப்பதை உறுதி செய்தது. இதையடுத்து அவர்களை தாக்கிய நிலையில் தீவிரவாதிகள் சுட்டதில் ஜூம் உடலில் 2 குண்டுகள் பாய்ந்த. இருப்பினும் உடலில் 2 குண்டுகள் பாய்ந்த நிலையிலும் கூட தீவிரவாதிகளை கண்டுபிடித்து அடையாளம் காட்டி கொடுத்தது.

 மருத்துவமனையில் சிகிச்சை

மருத்துவமனையில் சிகிச்சை

தற்போது காயமடைந்த ஜூம் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், ‛‛தெற்கு காஷ்மீரில் நடக்கும் தீவிரவாதிகள் வேட்டையில் ஜூம் அதிக முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜூம் நல்ல பயிற்சி பெற்ற நாய். தீவிரவாதிகளை கண்டறியும் வகையில் ஜூம் நாய்க்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது'' என்றனர். இதற்கிடையே காயமடைந்த ஜூம் விரைவில் நலம் பெற நெட்டிசன்கள் இணையதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+