உங்கள் நுரையீரல் எப்படியிருக்கு?.. இப்பவே சோதனை செய்யலாமா?
அகமதாபாத்: நுரையீரல் ஆரோக்கியமாக உள்ளதா என்பது குறித்து சோதனை செய்ய குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சைடஸ் மருத்துவமனை சிறிய செயல்முறை விளக்கத்தை அளித்துள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக வீசி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் நேரடியாக நுரையீரலை தாக்குகிறது. இதனால் ஆக்ஸிஜன் செல்வது தடைபடுகிறது.
கொரோனா வைரஸ் ஏற்பட்டவுடன் தற்போது சிடி ஸ்கேன் பரிசோதனை செய்து நுரையீரலில் கொரோனா வைரஸ் எத்தனை சதவீதம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிகிறார்கள்.

தனிமை
அந்த பாதிப்பிற்கேற்ப மருத்துவமனையில் தங்கியோ தனிமைப்படுத்திக் கொண்டோ சிகிச்சை பெறுகிறோம். இந்த சிகிச்சை முடிந்தவுடன் நமது நுரையீரலின் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற சந்தேகம் பலருக்கு இருக்கும்.

சோதனை
இதற்கு எளிதான அதே நேரத்தில் வேகமான ஒரு சோதனையை சைடஸ் மருத்துவமனை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. இதற்காக பணம் கட்டியெல்லாம் சோதனை செய்ய தேவையில்லை, அந்த மருத்துவமனையின் ட்விட்டர் பக்கத்திற்கு போனாலே போதும். அதில் நுரையீரலை சோதனை செய்வது எப்படி என்ற ட்வீட்டை ஓபன் செய்தால் நுரையீரல் படம் இருக்கிறது.

சிவப்பு நிறம்
அதை சுற்றி வட்ட வடிவில் ஒரு வளையம் இருக்கிறது. அதில் சிவப்பு நிறத்தில் ஒரு பந்து இருக்கிறது. நாம் மூச்சை பிடித்துக் கொள்ள வேண்டும். அந்த சிவப்பு பந்து கடிகாரம் முற்கள் போல் சுற்றும், ஒவ்வொரு சுற்றையும் அதாகவே கவுன்ட் செய்யும். 10 சுற்று வரை நம்மால் எந்தளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு மூச்சை இழுத்து பிடித்து பரிசோதனை செய்யலாம்.
|
சுய பரிசோதனை
இதில் 2 ரவுண்டுகளுக்குள் மூச்சை பிடிக்க முடிந்தால் நமது நுரையீரல்கள் இயல்பாக இருக்கின்றன என அர்த்தம். இதே 2 முதல் 5 சுற்றுகள் வரை நம்மால் மூச்சை பிடிக்க முடிந்தால் நமது நுரையீரல் வலிமையாக இருக்கிறது. 5 முதல் 10 சுற்றுகள் மூச்சை இழுத்து பிடிக்க முடிந்தால் நமது நுரையீரல் சிறப்பானது என அர்த்தம். இது போல் நெட்டிசன்கள் நுரையீரல் செய்து சுயசோதனை செய்து கொள்கிறார்கள்.












Click it and Unblock the Notifications