அயோத்தி ராமர் கோயிலுக்கும் அபுதாபி நாராயண் கோயிலுக்குமான ஒற்றுமை என்ன? 10 முக்கிய அம்சங்கள் இதோ!
அபுதாபி: ஐக்கிய அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலின் 10 சிறப்பம்சங்கள் யாவை?
கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமீரகத்திற்கு முதல் முறையாக வந்திருந்தார். அப்போது அவரிடம் இந்து மக்களுக்காக கோயில் கட்ட வேண்டும் என இந்தியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து ஐக்கிய அமீரக அரசிடம் கோயிலுக்கு இடம் ஒதுக்குவது குறித்து பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கு ஐக்கிய அமீரக அரசும் அனுமதி அளித்தது.
மேலும் அந்த கோயிலை கட்டுவதற்கு துபாய்- அபுதாபி, ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா பகுதியில் 27 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அபுதாபி அரசு சார்பில் கோயில் கட்ட நிலத்தை அன்பளிப்பாக தருவதற்கான உத்தரவை அன்றைய அபுதாபி பட்டத்து இளவரசராக பொறுப்பில் இருந்த தற்போதைய இளவரசருமான அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் பிறப்பித்தார்.
இந்த கோயிலின் கட்டுமான பணிகளுக்கு மற்றும் நிர்வகிக்க குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த BAPS (போச்சன்வாசி ஸ்ரீ அக்ஷார் புருஷோத்தம் சுவாமி நாராயண் சன்ஸ்தா) என்ற ஆன்மீக அமைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து அபுதாபியின் ரக்பா பகுதி அருகே முரைக்காவில் கடந்த சில ஆண்டுகளாக கோயில் கட்டுமான பணிகள் நடந்தன.
இந்த கட்டுமான பணிகள் எல்லாம் கடந்த மாதம்தான் முடிவடைந்தன. அபுதாபியின் முதல் இந்து கோயிலை இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். பிஏபிஎஸ்ஸின் தலைமை குரு மஹான்த் சுவாமி மகராஜ் இந்த கோயில் திறப்பு விழாவை தலைமை தாங்கி பூஜைகளை வழிநடத்துகிறார்.
அபுதாபியில் உள்ள முதல் இந்து கோயில் குறித்து 10 முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- இந்து கோயிலானது அபு முரைக்கா பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயிலை கட்டுவதற்கு ரூ 700 கோடி செலவாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து கற்கள் கொண்டு வரப்பட்டன. அது போல் வெள்ளை மார்பள் கற்கள் இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்டு அவை ஐக்கிய அரபு நாட்டில் வைத்து அசம்பிள் செய்யப்பட்டது.
- அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யான் என்பவர் 13.5 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக கொடுத்தார். இந்த நிலம் 2015ஆம் ஆண்டே அன்பளிப்பாக கொடுக்கப்பட்டுவிட்டது.
- கோயிலை BAPS போச்சன்வாசி ஸ்ரீ அக்ஷார் புருஷோத்தம் சுவாமி நாராயண் சன்ஸ்தா என்ற அமைப்புதான் கட்டியது. இந்த அமைப்பினர் கிருஷ்ணரின் அவதாரமான சுவாமி நாராயண் மீது பயபக்தி கொண்டவர்கள்.
- இந்த கோயில் வேத கட்டடக் கலை மற்றும் சிற்பங்களால் வடிவமைக்கப்பட்டது. கோயிலில் உள்ள 7 கோபுரங்களும் ஐக்கிய அரபு அமீரகத்தை குறிக்கிறது.
- இந்து கோயிலை கட்டுவதற்காக முரைக்கா பகுதியில் 2017 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து 13.5 ஏக்கர் மற்றொரு நிலத்தை 2019ஆம் ஆண்டு ஐக்கிய அமீரக அரசு ஒதுக்கியது.
- இந்த கோயிலில் வழிபாட்டு கூடம், அழகிய நந்தவனம், பார்வையாளர்கள் மையம் உள்ளிட்டவை உள்ளன.
- அடிக்கல் நாட்டிய இடத்தில் நிலநடுக்கம் உள்ளிட்டவற்றை கண்காணிக்க 100 சென்சார்கள் நிறுவப்பட்டன. அது போல் கோயிலின் பல்வேறு இடங்களிலும் சென்சார்கள் வைக்கப்பட்டன.
- அயோத்தி ராமர் கோயிலை போல் இந்த கோயிலிலும் இரும்பும் ஸ்டீலும் பயன்படுத்தப்படவில்லை.
- கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள பதிவு செய்வது கட்டாயம். இதற்காக வெப்சைட் உள்ளது. ஐக்கிய அமீரகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து இந்த கோயிலுக்கு வர போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவை ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள 150 இந்திய அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன.
- சுவாமி நாராயண் கோயிலில் வகுப்பறைகள், கண்காட்சி மையங்கள், குழந்தைகள் விளையாட மைதானங்கள் உள்ளன.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications