சீனாவில் காதலர் தினம்! காதலிக்கு முத்தம் கொடுத்த காதலனின் காது சவ்வு வெடித்து சிதறியது! நடந்தது என்ன?
பெய்ஜிங்: சீனாவில் காதலர் தினத்தையொட்டி காதலிக்கு 10 நிமிடம் தொடர் முத்தம் கொடுத்த இளைஞரின் காது சவ்வு கிழிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர் தினத்தையொட்டி சீனாவின் முக்கிய நகரங்களில் காதலர்கள் குவிந்தனர். ஷாப்பிங் மால்கள், உணவகங்கள், ஹோட்டல்கள், பரிசு பொருட்கள் விற்பனைக் கடைகள் என நிரம்பி வழிந்தன.

காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் பரிசுகளையும் அன்பையும் பரிமாறிக் கொண்டனர். பல காதலர்கள் கண்ணு மண்ணு தெரியாமல் அன்பை வாரி பொழிந்தனர். அதன் பலனைத்தான் ஒரு காதலன் தற்போது அனுபவித்து வருகிறார். அதாவது சீனாவின் ஜீஜியாங் மாகாணத்தின் வெஸ்ட் லேக் பகுதியைச் சேர்ந்தவர். இவர் தனது காதலியை பார்த்ததும் பயங்கர மகிழ்ச்சி அடைந்துள்ளார். அதன் எதிரொலியாக அந்த பெண்ணுக்கு 10 நிமிடமாக தொடர்ந்து முத்தம் கொடுத்தார்.
அப்போது அவருக்கு எதிர்பாராத திருப்புமுனை ஏற்பட்டது. அவரது இடது காதில் வலி ஏற்பட்டுள்ளது. ஏதோ கொப்பளிப்பது போன்று ஒரு சப்தமும் கேட்டுள்ளது. பின்னர் அவருடைய காது கேட்காமல் போனது. இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற அவரை மருத்துவர்கள் சோதனை செய்தனர். இதில் அவருடைய காது சவ்வு வெடித்து கிழிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு இரு மாதங்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது.
முத்தம் கொடுத்தால் காது சவ்வு ஏன் கிழியுமா என பலர் ஆச்சரியப்படுகிறார்கள். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் ஒருவர் மிகவும் உற்சாக மிகுதியில் காதலிக்கு முத்தம் கொடுக்கும் போது காதில் காற்றின் அழுத்தத்தில் ஒரு மாறுபாட்டை ஏற்படுத்தும். இதன் விளைவாக செவிப்பறையில் கிழிவு ஏற்படுவது வாடிக்கைதான். தொடர்ந்து முத்தம் கொடுப்பதை போல் சண்டைகள், தாக்குதல்கள், சாலை விபத்துகள், தலை கீழாக டைவ் அடிப்பது, விமானத்தில் பயணம் செய்வது உள்ளிட்டவையும் காது கேளாமையை ஏற்படுத்தும்.
காதில் ஏற்படும் அழற்சியானது அழுத்தத்தில் மாறுபாட்டை கொடுத்து, காது கேளாமையை கொடுக்கிறது. முத்தம் கொடுத்ததால் காது சவ்வு கிழிந்தது இது முதல் முறை அல்ல. இதே போன்றதொரு சம்பவம் கடந்த 2008ஆம் ஆண்டும் நிகழ்ந்துள்ளது. தனது காதலனுக்கு முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்த காதலிக்கு காது கேட்காமல் போனது. அது போல் கடந்த மாதம் கூட தெற்கு சீனாவில் ஒரு தம்பதி வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த போது காது கேட்காமல் போனது.
காதலர் தினம் உலகம் முழுவதும் பிப்ரவரி 14 ஆம் தேதிதானே நடக்கிறது. இதென்ன சீனர்களுக்கு மட்டும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி என நீங்கள் கேட்பது புரிகிறது. அதாவது சந்திர மாதத்தின் 7ஆவது நாளில் கிக்ஸி எனும் திருவிழா சீனாவில் கொண்டாடப்படுகிறது. அந்த நாள் இந்த ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இது சீனாவை பொருத்தமட்டில் காதலர் தினத்திற்கு சமமானது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications