ஒரு கொரில்லா vs 100 இளைஞர்கள்.. ஒட்டுமொத்த உலகமே விவாதிப்பது இதை பற்றி தான்.. என்ன காரணம் தெரியுமா!
சியாட்டில்: இப்போது இணையத்தில் திடீரென ஒரு விஷயம் டிரெண்டாகி வருகிறது. அதாவது 100 ஆண்களுக்கும் ஒரு கொரில்லாவுக்கும் இடையே சண்டை வந்தால் அதில் யார் ஜெயிப்பார்கள் என்ற வினோதமான ஒரு மேட்டர் தான் இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது. இதில் நாம் எதிர்பார்க்காத பல சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
சமூக வலைத்தளங்களில் பொதுவாக எப்போது என்ன டிரெண்ட் ஆகும் என்றே தெரியாது. திடீர் திடீரென எதாவது ஒரு விஷயம் டிரெண்டாகி கொண்டு இருக்கும். அப்படித் தான் இப்போது ஒரு வினோதமான விஷயம் டிரெண்டாகி வருகிறது. அதாவது 100 ஆண்களுக்கும் ஒரு கொரில்லாவுக்கும் இடையே சண்டை வைத்தால் யார் ஜெயிப்பார்கள் என்பதே அது.

கொரில்லா
இது ஒரு கற்பனையான விவாதமாகவே முதலில் இருந்தது. ஆனால் உலகில் அதிக சப்ஸ்கிரைபர்களை கொண்ட பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட், "100 ஆண்கள் vs 1 கொரில்லா" என்ற ஒரு புதிய போஸ்ட்டை பதிவிடவே அது உடனடியாக டிரெண்டிங் ஆனது. 100 ஆண்கள் சேர்ந்து ஒரு கொரில்லாவை வீழ்த்த முடியுமா என்று நெட்டிசன்கள் விவாதித்துக் கொண்டிருக்க பிஸ்டர் பீஸ்ட் இது தொடர்பாக ஒரு போஸ்ட்டை பதிவிட்டார். அதாவது கொரில்லா முன்பு அவர் நிற்பது போன்ற போட்டோஷாப் படத்தைப் பகிர்ந்த அவர், இதைச் சோதனை செய்ய 100 ஆண்கள் வேண்டும் எனப் பதிவிட்டிருந்தார்.
அவரது போஸ்ட் உடனடியாக டிரெண்டானது. உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கூட அதற்குப் பதிலளித்தார். எலான் மஸ்க் இது தொடர்பாக, "நிச்சயம் முயலலாமே.. இதை விட என்ன மோசமாக நடந்துவிடப் போகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
மிஸ்டர் பீஸ்ட்
பொதுவாகவே மிஸ்டர் பீஸ்ட் இதுபோல வினோதமான போட்டிகளை அவ்வப்போது நடத்தவே செய்வார். அதற்குப் பெரிய தொகையைப் பரிசாகவும் கொடுப்பார். இதனால் நெட்டிசன் ஒருவர் இந்தப் போட்டிக்கு எவ்வளவு பரிசு கிடைக்கும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். சரியான மனநிலை இருந்தால் யாரையும் வெல்லலாம்.. இந்தப் போட்டிக்கு நாங்கள் தயார்.. பரிசுத் தொகையை மட்டும் சொல்லுங்க போதும் என அவர் பதிவிட்டுள்ளார்.
யாருக்கு வாய்ப்பு அதிகம்
பெரும்பாலானோர் பல ஆண்களுக்கு டேமேஜ் அதிகம் இருக்கும் என்றாலும் இறுதியில் கொரில்லாவை வீழ்த்திவிட முடியும் என்றே பதிவிட்டுள்ளனர். அதேநேரம் இன்னும் சிலர் கொரில்லா வெல்லவே வாய்ப்பு அதிகம் எனப் பதிவிட்டுள்ளனர். இது 4 வயது சிறுவர்கள் 100 பேரை ஒரு இளைஞருக்கு எதிராகச் சண்டை போட வைப்பது போன்றது என்றும் இதில் மனிதர்கள் வெல்ல வாய்ப்பே இல்லை எனப் பதிவிட்டுள்ளனர்.
கொரில்லா vs மனிதன்
அவர்கள் சொல்வதில் அர்த்தம் இல்லாமல் இல்லை.. ஏனென்றால், ஒரு சில்வர்பேக் கொரில்லா 220 கிலோ வரை எடை கொண்டது. அந்தக் கொரில்லாவால் 815 கிலோ எடையைத் தூக்கி மணிக்கு 25 மைல் வேகத்தில் ஓட முடியும்.. மறுபுறம் ஒரு நபரால் அதிகபட்சமாக 8 மைல் வேகத்திலேயே ஓட முடியும். என்ன தான் கொரில்லா சைவம் என்றாலும் தன்னை பாதுகாக்க எதிரிகளைக் கடிக்கும். அது 1300 psi வரை அழுத்தம் இருக்கும். அதாவது மனிதர் கடிப்பதை விட 10 மடங்கு வலிமையானது. நாய் கடிப்பதை விட மடங்கு வலிமையானதாகும். நீங்க சொல்லுங்கள் யார் ஜெயிப்பார்கள்..!
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications