Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 100 பேர் பலி? அதிக ஆட்களை ஏற்றி சென்றதால் விபத்து!

Subscribe to Oneindia Tamil

அபுஜா: நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 100 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றி சென்றதால் படகு ஆற்றில் கவிழ்ந்திருக்கிறது.


நைரிஜியாவில் ஆறுகள் அதிகமாக இருப்பதால், படகு போக்குவரத்து இயல்பானதாக இருக்கிறது. ஆனால், படகில் குறிப்பிட்ட அளவில்தான் ஆட்களை ஏற்றி செல்ல வேண்டும் என்றும், பயணிப்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்ட வேண்டும் என்கிற விதி இருந்தும், அதை படகு உரிமையாளர்கள் மீறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக ஏராளமான விபத்துக்கள் நடந்துள்ளன. கடந்த 18 மாதங்களில் ஏற்கெனவே ஆற்றில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 100 பேர் உயிரிழந்திருந்தனர்.

nigeria boat

இதனையடுத்து நேற்று முன்தினம் இதேபோல மற்றொரு விபத்து நடந்திருக்கிறது. வடக்கு நைஜீரியாவின் மோக்வா எனும் பகுதியில் இந்த விபத்து நடந்திருக்கிறது. செவ்வாய்க்கிழமையன்று இரவு, மத திருவிழா ஒன்றில் பங்கேற்று விட்டு படகில் சுமார் 300 பேர் வீடு திரும்பியுள்ளனர். படகு நடு ஆற்றில் வந்தபோது, பாரம் தாங்க முடியாமல் கவிழ்ந்திருக்கிறது. இதில் சுமார் 120 பேர் மீட்கப்பட்டு விட்டாலும், மீதம் இருப்போரின் நிலைமை என்ன ஆனது என்று தெரியவில்லை.


இதில் 100 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதுவரை 20க்கும் மேற்பட்ட சடலங்களை அவர்கள் மீட்டிருக்கின்றனர். இந்த விபத்து குறித்து அவர்கள் கூறுகையில், “படகில் அதிக எண்ணிக்கையில் பயணிகள் இருந்ததே விபத்திற்கு காரணம். ஒவ்வொரு படகின் தன்மைக்கு ஏற்ப, எத்தனை பயணிகளை ஏற்ற வேண்டும் என்கிற விதிமுறைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அது இங்கு பின்பற்றப்படவில்லை. இதுவே விபத்து காரணம். காணாமல் போனவர்களை தீவிரமாக தேடி வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

கடந்த 18 மாதங்களில் நடக்கும் இரண்டாவது பெரிய விபத்து இது என்று உள்ளூர் படகு ஓட்டுநர்கள் கூறியுள்ளனர். ஏற்கெனவே இதே போன்ற விபத்து ஒன்றில் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+