'ஸ்கை டைவிங்’ செய்து... அந்தரத்தில் 100வது பிறந்தநாளைக் கொண்டாடிய பாட்டி!
கேப் டவுன்: தென்னாப்பிரிக்காவில் 100 வயது மூதாட்டி ஒருவர், ‘ஸ்கை டைவிங்' செய்து தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் ஜியோர்ஜினா ஹெவுட் என்ற மூதாட்டி. சிறு வயது முதலே ஸ்கை டைவிங் செய்வதில் அதீத ஆர்வம் கொண்டவர் ஹெவுட்.

கடந்த 2007ம் ஆண்டு தனது 92 வயதில், அந்நாட்டு மீட்புகுழுவினர்களுக்கு உபகரணங்கள் வாங்க நிதி திரட்டுவதற்காக ஹெவுட் ஸ்கை டைவிங் செய்தார்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை அன்று ஹெவுட் தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடினார். தனது பிறந்தநாளை உலக மக்கள் அனைவரும் பேச வேண்டும் எனக் கருதிய ஹெவுட், ஓடும் விமானத்தில் இருந்து ‘ஸ்கை டைவிங்' மூலம் கீழே குதித்து இளைஞர்களையும் இளம் பெண்களையும் வியப்பில் ஆழ்த்தினார். ஜேசன் பேக்கர் என்பவரின் துணையுடன் இந்த சாதனையை ஹெவுட் வெற்றிகரமாக செய்து முடித்தார்.

ஹெயிட்டின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் சேர்ந்து, அவரது குடும்பத்தினர் 15 பேரும் ஸ்கை டைவிங் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications