1500 மீ பின்புற நீச்சல் போட்டியில் உலக சாதனை புரிந்த 100 வயது ஜப்பான் பாட்டி
டோக்கியோ: ஜப்பானில் நடைபெற்ற நீச்சல் போட்டி ஒன்றில் பெண்கள் பிரிவில் பின்புறமாக நீச்சலடிக்கும் போட்டியில் 100 வயது பெண் ஒருவர் 1500 மீட்டர் தூரத்தை ஒரு மணி நேரம் 15 நிமிடங்களில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.
ஜப்பானில் உள்ள மட்சுயாமா நகரில் மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் பெண்கள் ப்ரீ ஸ்டைல் பிரிவுக்கான 1500 மீட்டர் பின்புற நீச்சல் போட்டியில் 100 வயதான மீக்கோ நகோகா கலந்து கொண்டார்.

100 முதல் 104 வயதுக்குரியவர்களுக்கான ப்ரீ ஸ்டைல் போட்டியில் இவர் ஒருவர் மட்டுமே கலந்து கொண்டார். ஆயினும், 1500 மீட்டர் தூரத்தை ஒரு மணி நேரம், 15 நிமிடம் மற்றும் 54 விநாடிகளில் பின்புறமாக நீச்சலடித்து அடைந்தார்.
இது உலக சாதனை என ஜப்பான் மாஸ்டர்ஸ் நீச்சல் சங்கம் தெரிவித்துள்ளது. அவரது சாதனையை கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உலக சாதனை படைத்துள்ள மீக்கோ தொழில்முறை நீச்சல் வீராங்கனை அல்ல. 1914ம் ஆண்டு பிறந்த மீக்கோவுக்கு 80 வயது வரை நீந்தத் தெரியாதாம். ஆனால், 82 வயதில் அவரது முழங்காலில் உண்டான பிரச்சினை காரணமாக அவர் நீந்தக் கற்றுக் கொண்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து நீச்சல் மீது தீராக் காதல் ஏற்பட்டு விட, தொடர்ந்து பயிற்சிகள் செய்து வந்துள்ளார். கடந்த 2002ம் ஆண்டு நியூசிலாந்தில் உள்ள கிரைஸ்ட் சர்ச் நகரில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட மீக்கோ, முதல் பரிசை தட்டிச் சென்றார். அதேபோல், அங்கு நடந்த 50 மீ பின்புற நீச்சல் போட்டியில் வெண்கல பதக்கமும் பெற்றார்.
அதன் பின் 2004 ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற 50 மீ, 100 மீ மற்றும் 200 மீ பின்புற நீச்சல் போட்டிகளில் வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். மீக்கோ 90 வயதை அடைந்த போது, அவருக்கு ஜப்பான் நாட்டின் தேசிய நீச்சல் வீராங்கனை என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதன் பின் நடைபெற்ற 800 மீட்டர் ப்ரீ ஸ்டைல் பின்புற நீச்சல் போட்டியில் தேசிய அளவில் சாதனை படைத்தார். இதை தொடர்ந்து பயிற்சியாளரை வைத்துக்கொண்டு தொடர் பயிற்சிகளை மீக்கோ மேற்கொண்டு வந்தார்.
தற்போது செய்துள்ள உலக சாதனையையும் சேர்த்து இதுவரை மீக்கோ, 24 உலக சாதனைகள் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications