103 ஐ கைபிடித்த 99... தள்ளாத வயதிலும் தளராத காதல்...
பராகுவே: காதல் கடந்தாலும் காதல் ஜெயிக்கும் என்று நிரூபித்துள்ளனர் பராகுவே நாட்டைச் சேர்ந்த வயதான காதல் ஜோடிகள். 80 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து தற்போது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
பராகுவே நாட்டைச் சேர்ந்த ஜோஸ் மேனுவல் ரெய்லா, அவரது காதலி மார்டினா லோபஸ். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக வாழத் தொடங்கிவிட்டனர்.
அதன்பிறகு குழந்தைகள் பிறந்து பேரப்பிள்ளைகளை பார்த்த பின்னர் சுமார்49 ஆண்டுகள் கழித்து சாதாரண முறையில் திருமணமும் செய்து கொண்டனர்.
ஆனால், பாதிரியாரின் முன்னிலையில் அந்த திருமணம் நடைபெறவில்லை. இது ஒரு மிகப்பெரிய மனக்குறையாக காதலி மார்டினாவுக்கு இருந்துள்ளது.
இதனால், தற்போது குடும்பத்தாரின் ஒத்துழைப்போடு, பாதிரியார் முன்னிலையில் இந்த பிரம்மாண்ட திருமண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

வயதான தம்பதியர்
பராகுவேவில் சான்டா ரோஸாவில் உள்ள இந்த மிகவும் வயதான புது மண காதல் தம்பதிகளின் திருமணம் அங்குள்ள தேவாலயத்தில் முறைப்படி நடைபெற்றது. பிறகு உற்சாகமான விருந்து நிகழ்ச்சி அவர்களது இல்லத்தில் நடத்தப்பட்டது.

வீல் சேரில் அமர்ந்து
மணமகள் கிறித்துவ முறைப்படி வெள்ளை நிறை நீண்ட ஆடையை உடுத்தி வந்திருந்தார். தள்ளாத வயதில் நடக்க முடியாததால் மாப்பிள்ளை மேனுவல் வீல் சேரில் அமர்ந்தபடி தனது காதலியின் கரம் பிடித்தார்.

8 குழந்தைகள் 50 பேரப்பிள்ளைகள்
இந்த திருமணத்துக்கு முக்கிய விருந்தினர்களாக, ஜோஸ் மேனுவல் ரெய்னா - மார்டினா லோபஸ் தம்பதிகளுக்குப் பிறந்த 8 பிள்ளைகளும், 50 பேரக் குழந்தைகளும், 35 கொள்ளுப் பேரக் குழந்தைகளும், 20 எள்ளுப் பேரக் குழந்தைகளும் கலந்து கொண்டதுதான் திருமணத்தின் ஹை லைட்.

80 ஆண்டு மணவாழ்க்கை
திருமணம் செய்து கொண்டால் காதல் குறைந்துவிடும் என்று நினைத்ததோ இந்த ஜோடி. சுமார் 80 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து, தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

நீங்கிய மனக்குறை
பாதிரியார் முன்பு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மார்டினாவினாவின் மனக்குறை நீங்கியுள்ளதாம். இது குறித்து பேசிய மணமகள் மார்டினா, நான் தற்போது மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் உள்ளேன். எங்களது உறவு பாதிரியாரின் வாழ்த்துக்களைப் பெற்றுள்ளது என்று நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார். காதல் கடந்தாலும் உண்மைக் காதல் என்றைக்கும் மாறாது என்று நிரூபித்துள்ளது இந்த வயதான காதல் ஜோடி.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications