தாய்க்கு பிரசவம் பார்த்து தம்பி பாப்பாவை வெளியே எடுத்த 11 வயது சிறுவன்
மரியட்டா: ஜார்ஜியாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அவரின் 11 வயது மகன் பிரசவம் பார்த்த அதிசயம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள மரியட்டாவைச் சேர்ந்தவர் கென்யார்தா ட்யூக்ஸ். அவருக்கு ஜேம்ஸ் ட்யூக்ஸ் என்ற 11 வயது மகன் உள்ளார். இந்நிலையில் கென்யார்தா இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆனார்.

கடந்த வாரம் கென்யார்தாவின் கணவர் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் ஜேம்ஸும், கென்யார்தாவும் தான் இருந்துள்ளனர். அப்பொழுது நிறைமாத கர்ப்பிணியான கென்யார்தாவுக்கு திடீர் என்று பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து ஜேம்ஸ் தனது தாய்க்கு பிரசவம் பார்த்தார். ஜேம்ஸின் உதவியுடன் கென்யார்தா ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு ராயல் ட்யூக்ஸ் என பெயர் வைத்துள்ளனர்.
குழந்தை பிறந்த பிறகு ஜேம்ஸ் 911க்கு போன் செய்து வீட்டில் தம்பி பாப்பா பிறந்துள்ளதாகவும், ஆம்புலன்ஸை அனுப்பி வைக்குமாறும் தெரிவித்துள்ளார். அதற்கு அவர்கள் சுத்தமான துணியை எடுத்து குழந்தையின் முகம், உடலை துடைக்குமாறு கூறியுள்ளனர்.
இது குறித்து கென்யார்தா கூறுகையில்,
என் மகன் தான் எனக்கு உதவியாக இருந்தார். அவர் ஒரு ஏஞ்சல். அவர் தான் என் மருத்துவராக இருந்தார். அவரே என் சூப்பர் ஹீரோ என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications