அமெரிக்காவில் பேருந்து-லாரி பயங்கர மோதல்: 13 பேர் பலி; 3 பேர் படுகாயம்
டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த சாலை விபத்தில் 13 பேர் பலியாகினர்.
டெக்சாஸ்: அமெரிக்காவில் பேருந்து - லாரி பயங்கரமாக மோதிக்கொண்ட விபத்தில் 13 பேர் பலியாகினர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் தேவாலயத்துக்கு சொந்தமான பஸ் மீது டிரக் ஒன்று பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 12 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார். டெக்சாஸ் மாகாணத்தில் தென் பகுதியில் உள்ள இரு வழிச்சாலையில் இந்த விபத்து எற்பட்டது
பலியானவர்கள் அனைவரும் 61 முதல் 87 வயதுக்குட்பட்டவர்கள் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த விபத்திற்கு டெக்சாஸ் மாகாண கவர்னர் கிரேக் அபோட் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து டெக்சாஸ் மாகாண போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications