நைஜீரியாவில் மினி பஸ், டிரக் மோதல்: 14 பேர் உடல் நசுங்கி பலி
Subscribe to Oneindia Tamil
லாகோஸ்: நைஜீரியாவில் நடந்த சாலை விபத்தில் 14 பேர் பலியாகினர்.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள மிகவும் பிரபலமான நகரமான லாகோஸில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ளது பெனின்-ஒகேனே நெடுஞ்சாலை. அந்த நெடுஞ்சாலையில் எடோ நகர போக்குவரத்து சேவைக்கு சொந்தமான 15 இருக்கைகள் கொண்ட டொயோட்டா ஹயேஸ் பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது தலைநகர் அபுஜாவில் இருந்து வந்து கொண்டிருந்த டிரக் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதையடுத்து அந்த டிரக் எதிரே வந்த பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 13 பேர் மற்றும் டிரைவர் ஆகியோர் உடல் நசுங்கி பலியாகினர்.
டிரக்கின் பிரேக் செயல் இழந்தது தான் இந்த விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications