14 வயதில் கலிபோர்னியாவை கலக்கிய சிறுவன்.. போலீஸ் கெட்டப்பில் பணம் பறித்த பள்ளி மாணவன்
கலிபோர்னியாவை சேர்ந்த 14 வயது பள்ளி சிறுவன் ஒருவன் போலீஸ் கெட்டப்பில் கடந்த சில மாதங்களாக பல மோசடி வேலைகளை செய்து இருக்கிறான்.
கலிபோர்னியா: கலிபோர்னியாவை சேர்ந்த 14 வயது பள்ளி சிறுவன் ஒருவன் போலீஸ் கெட்டப்பில் கடந்த சில மாதங்களாக பல மோசடி வேலைகளை செய்து இருக்கிறான்.
போலீஸ் இவனின் தற்போது கைது செய்து விசாரித்து வருகிறது. இவன் கடந்த 3 மாதங்களாக போலீஸ் கெட்டப்பில் பல வித்தியாசமான மோசடிகளை செய்து இருக்கிறான்.
நிறைய பணம் மோசடி செய்துள்ளான். அதே சமயத்தில் பணம் மோசடி செய்தது மட்டுமில்லாமல் நிறைய பெண்களை போலீஸ் என்று கூறி ஏமாற்றி இருக்கிறான்.

போலீஸ்
இவன் தன்னுடைய பாட்டி காரில் போலீஸ் சைரனை பொருத்தி இருக்கிறான். பார்க்க உண்மையான துப்பாக்கி போலவே இருக்கும் பொம்மை துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளான். வாடகைக்கு போலீஸ் உடை, பொய்யான ஐடி கார்ட் ஆகியவற்றையும் பயன்படுத்தி இருக்கிறான்.

பணம்
கடந்த 3 மாதமாக இந்த கெட்டப்பில்தான் சுற்றி இருக்கிறான். டிராபிக் விதிமுறைகளை மீறுபவர்களை பாதியில் நிறுத்தி அபராதம் விதித்துள்ளான். பல பேரிடம் இப்படி பணம் பறித்துள்ளான். அதேபோல் திருடர்களை பிடித்து பணம் வாங்கி இருக்கிறான்.

பெண்களுக்கு தொல்லை
அதேபோல் இரவில் தனியாக செல்லும் பெண்களை வழிமறித்து பணம் பறித்துள்ளான். அவர்களின் விலாசம், போன் நம்பர் ஆகியவற்றை வாங்கி தொல்லை கொடுத்துள்ளான். வீட்டிற்கு வரும் போது ஆடை மாற்றிவிட்டு, சைரனை எடுத்துவிட்டு பள்ளி உடையில் திரும்பி இருக்கிறான்.

போலீசிடம் மாட்டிடம்
இவன் ஒரு வீட்டில் சோதனை செய்யும் போது, அந்த வீட்டில் இருந்த பெண் சந்தேகப்பட்டு போலீசுக்கு புகார் அளித்து இருக்கிறார். இவனை தற்போது போலீஸ் கைது செய்து சிறுவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி இருக்கிறது. சிறுவன் என்பதால் இவன் பெயரை வெளியிடவில்லை.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications