குவைத்தில் பயங்கர சாலை விபத்து: 2. பஸ்கள் மோதியதில் இந்தியர்கள் உள்பட 15 பேர் உடல் நசுங்கி பலி

குவைத்தில் நடந்த சாலைவிபத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட 15 பேர் பலியானார்கள்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    குவைத் சாலை விபத்து: இந்தியர்கள் உள்பட 15 பேர் உடல் நசுங்கி பலி

    குவைத்: குவைத்தில் நடந்த பயங்கர சாலைவிபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என கூறப்படுகிறது.

    இரண்டு பேருந்துகளில் தொழிலாளர்கள் பணிமுடிந்து தங்களது இருப்பிடம் திரும்பி கொண்டிருந்தனர். எதிரெதிர் திசையில் வந்த இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டது.

    15 people died in a road accident in Kuwait

    பர்கான் பீல்டு என்ற இடம் அருகே நெடுஞ்சாலையில் இரு பேருந்துகளும் எதிரெதிர் திசையில் வந்துகொண்டிருந்தன.

    15 people died in a road accident in Kuwait

    அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு பேருந்துகளும் ஒன்றோடு ஒன்று பலமாக மோதி விபத்துக்குள்ளானதில் 15-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானதாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    15 people died in a road accident in Kuwait

    தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் உடனடி மீட்பு பணியில் இறங்கியுள்ளனர். காயமடைந்தோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கூடும் என அஞ்சப்படுகிறது.

    தகவல் -படங்கள்: லக்ஷன், குவைத்

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+