கிவி இருக்கே .. ஒரு காலத்துல காக்கா மாதிரி கடகடன்னு பறந்த பறவைதானாம்...!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: கடந்த 150 ஆண்டுகாலமாக இருந்து வரும் ஒரு மரபியல் மர்மத்தை விஞ்ஞானிகள் முதல் முறையாக உடைத்து சில உண்மைகளை வெளிக் கொணர்ந்துள்ளனர். அதாவது கிவி பறவை ஒரு காலத்தில் வழக்கமான பறவைகள் போல பறந்த பறவைதானாம்.

அடிலைட் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் குழுவினர்தான் இதைச் சொல்லியுள்ளனர். மேலும் கிவி பறவையின் நெருங்கிய உறவினர் எமு கோழி என்று கூறப்படுவது தவறு என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

மடகாஸ்கர் யானைப் பறவைக்குச் சொந்தம்

மடகாஸ்கர் யானைப் பறவைக்குச் சொந்தம்

அதேசமயம் கிவியானது, தற்போது உலகில் எங்குமே இல்லாத மடகாஸ்கரைச் சேர்ந்த யானைப் பறவைக்கு நெருங்கிய தொடர்புடையது என்று இிந்தக் குழு கூறுகிறது. யானைப் பறவையானது, 275 கிலோ எடையும், 2 முதல் 3 மீட்டர் உயரமும் கொண்ட பிரமாண்டப் பறவையாகும். அது இப்போது அழிந்து விட்டது.

செமையாக பறந்த பறவைகள்

செமையாக பறந்த பறவைகள்

மேலும் கிவியானது ஒரு காலத்தில் வானில் சுதந்திரமாக சுற்றித் திரிந்த பறவைதான் என்றும் இந்த ஆய்வுக் குழு கூறுகிறது. தற்போது கிவி பறப்பதில்லை. ஆனாலும் இது பறவையினம்தான்.

ஃபாசில் ஆய்வு

ஃபாசில் ஆய்வு

கிவியின் மூதாதையர்கள் குறித்த சில புதை படிவங்கள் அதாவது fossils மூலமாக இந்த முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர். அதில் ஒரு காலத்தில் கிவி பறவைகள் நன்றாகப் பறந்து திரிந்த பறவைதான் என்பது தெரிய வருவதாக இக்குழு கூறுகிறது.

நியூசிலாந்துக்கு வந்தபோது பறந்ததாம்

நியூசிலாந்துக்கு வந்தபோது பறந்ததாம்

கிவி பறவைகள் நியூசிலாந்தில் முதல் முறையாக வந்து சேர்ந்தபோது நன்றாகப் பறந்து திரிந்த நிலையில்தான் இருந்ததாம். மேலும் பிற விலங்குகளிடம் சிக்காத வகையில் கிவி பறவையானது உருவத்தில் சிறிதாக மாறிப் போய் விட்டதாகவும், பறப்பதை படிப்படியாக குறைத்துக் கொண்டதாகவும் ஆய்வுக் குழுவினர் கூறுகிறார்கள்.

உலகம் முழுவதும் சுற்றித் திரிந்த கிவி

உலகம் முழுவதும் சுற்றித் திரிந்த கிவி

மேலும் கிவி மற்றும் மடகாஸ்கரின் யானைப் பறவை ஆகியவை உலகின் பல பகுதிகளிலும் ஒரு காலத்தில் பரவியிருந்தனவாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+