பாகிஸ்தானில் பயங்கரம்.. நேருக்கு நேர் மோதிய ரயில்கள்.. 16 பேர் சாவு
கராச்சியில் பயணி ரயில்கள் மோதிய விபத்தில் 16 பேர் பலியாகி உள்ளதாகவும் 40 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கராச்சியில் பயணிகள் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலியாகினர். இதில் 40 பேர் காயமடைந்தனர்.
முல்தானிலிருந்து புறப்பட்ட ஜாகாரியா எக்ஸ்பிரஸும்இ லாகூரில் இருந்து புறப்பட்ட பாரீத் எக்ஸ்பிரஸும் கராச்சி நகரின் அருகே லன்ந்தி பகுதியில் ஒன்றோடொன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில் ரயிலில் பயணம் செய்த 16 பேர் பலியாகினர். 40 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்புப் படையினர் மீட்டு அருகேவுள்ள மருத்துவனையில் சேர்த்துள்ளனர்.
பலர் ரயிலில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் பாகிஸ்தானின் மத்திய பகுதியில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் பலியாகினர். 150 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications