விமானத்திலேயே வித் அவுட்டில் பயணித்த 16 வயது சிறுவன்
வாஷிங்டன்: அமெரிக்காவில் விமானத்தின் சக்கரங்கள் உள்ள பெட்டியில் உட்கார்ந்து கொண்டு 5 மணி நேரம் வித்தவுட்டில் பயணித்த 16 வயது சிறுவன் குழந்தைகள் நல அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டான்.
அமெரிக்காவில் தற்போது கடுமையான குளிர் வாட்டி வருகிறது. உறையும் குளிருக்கு நடுவில் கலிபோர்னியாவில் இருந்து ஹவாய் நகரம் வரையில் விமானத்தின் சக்கரம் உள்ள பெட்டியில் அமர்ந்து 16 வயது சிறுவன் பயணித்துள்ளான். குளிர், அதிகப்படியான காற்றழுத்தம் போன்றவற்றால் சுவாசிக்க ஆக்சிஜன் போதிய அளவு கிடைக்காமல் அச்சிறுவன் மயக்கமடைந்துள்ளான்.
ஆனால் விமானம் தரையிறங்கியபோது அதிருஷ்டவசமாக சிறுவனுக்கு நினைவு திரும்பியது.
ஹவாய் விமான நிலையத்தில் அச்சிறுவனை பார்த்த விமான நிலைய அதிகாரிகள், மத்திய புலனாய்வு துறையான எப்.பி.ஐக்கு தகவல் அளித்தனர். எப்.பி.ஐ அதிகாரிகள் சிறுவனிடம் சோதனை நடத்தியபோது அவனிடம் எந்த ஒரு ஆவணமும் இல்லை என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அச்சிறுவனிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், அவன் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் குழந்தைகள் நல அமைப்பு ஒன்றிடம் ஒப்படைத்தனர். இவ்வளவு தூரம், உறை குளிருக்கு நடுவே விமானத்தின் அடியில் இருந்தபடி உயிரோடு வந்திருப்பதே அதிசயம்தான் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications