விடுமுறைக்காக வந்த 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் .. 30 ஆண்கள்!.. வெடித்தது போராட்டம்!
ஜெருசலேம்: இஸ்ரேல் நாட்டில் ஒரு ஹோட்டலுக்கு விடுமுறையை கொண்டாட வந்த 16 வயது சிறுமியை 30 ஆண்கள் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்யக் கோரி அங்கு போராட்டம் வெடித்துள்ளது.
Recommended Video
இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் கொந்தளிப்பின் உச்சத்திற்கே சென்று ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடலோர நகரமான எல்லாட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் விடுமுறையை கழிக்க 16 வயது சிறுமி கடந்த வாரம் வந்திருந்தார். அவர் தனது நண்பர்களுடன் மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது.

பலாத்காரம்
விடுமுறையை முடித்து கொண்டு வீடு திரும்புவதற்கு முன்னர் அவர் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியை இன்னொரு அறைக்கு தூக்கி சென்ற கயவர்கள் அவரை கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த சிறுமியை ஈவு இரக்கமின்றி 30 ஆண்கள் தொடர்ந்து பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.

போலீஸார் விசாரணை
இந்த சம்பவத்தில் 27 வயது இளைஞர் ஒருவரை போலீஸார் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் சம்பவம் நடந்த நேரத்தில் அந்த சிறுமி மதுபோதையில் இருந்ததாகவும், அவராகவே எங்களை ஒவ்வொருவராக அழைத்து உறவு கொண்டார் என்றும் இதற்கு அந்த அறையின் வெளியே வரிசையில் நின்றிருந்தவர்கள் சாட்சி என்றும் கூறியுள்ளார்.

நேரடி சாட்சியம்
அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது அறைக்கு வெளியே ஆண்கள் கூட்டம் வரிசையாக நிற்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக யாரும் நேரடி சாட்சியம் அளிக்கவில்லை. இதனிடையே 20 வயது மதிக்கத்தக்க இன்னொரு நபர் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில் இந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. வேறு வார்த்தைகளே இல்லை.

போராட்டம்
இது சிறுமிக்கு மட்டும் எதிரான குற்றம் இல்லை. ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே எதிரான குற்றமாகும். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என தெரிவித்தார். சிறுமி கூட்டு பலாத்காரம் சம்பவத்தால் நாடே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. சிறுமிக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
-
ஈரான் கொடுத்த கடைசி வார்னிங்.. இஸ்ரேல் செயலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பீதி! -
டொனால்ட் டிரம்ப் 'நான்தான் பாஸ்'.. டிரம்ப் சொல்லியும் கேட்காத இஸ்ரேல் நெதன்யாகு.. புதிய தலைவலி! -
ஈரானின் சர்ப்ரைஸ் தாக்குதல்.. ஆடிப்போன இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. 3 நகரங்களில் மக்கள் அலறல்! -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
நள்ளிரவில் மீண்டும் வெடித்த போர்.. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. போர் நிறுத்தம் காலி? -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்!












Click it and Unblock the Notifications