இந்தோனேசியாவில் இசை கிளப்பில் பயங்கர தீ: 17 பேர் பலி
ஜகார்தா: இந்தோனேசியாவின் சுலாவசி தீவில் இருக்கும் இசை கிளப் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உடல் கருகி பலியாகினர்.
இந்தோனேசியாவில் உள்ள சுலாவசி தீவின் தலைநகரான மானடோவில் செயல்பட்டு வருகிறது இனுல் விஸ்டா காரியோகி இசை கிளப். மூன்றடுக்கு மாடியில் உள்ள அந்த கிளப்பின் இரண்டாவது மாடியில் இன்று அதிகாலை 1 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது.

அப்போது நூற்றுக்கணக்கானோர் அந்த கிளப்பில் பாடிக் கொண்டிருந்தனர். இந்த விபத்தில் 17 பேர் உடல் கருகி பலியாகினர். பலியானவர்கள் அனைவரும் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள்.
மேலும் புகை மண்டலத்தில் சிக்கி பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மூச்சுத் திணறல் ஏற்பட்ட 71 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் கிளப்பிற்கு வந்து போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்திற்கான காரணம் என்னவென்று உறுதியாக தெரியவில்லை. விபத்திற்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த கட்டிடத்தில் தீ பிடித்தவுடன் பலர் ஜன்னல் வழியாக கீழே குதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications