ஜப்பானில் பயங்கரம்: மாற்றுத்திறனாளிகள் காப்பக்கத்தில் கத்திக்குத்து- 19 பேர் பலி, 26 பேர் காயம்
டோக்கியோ: ஜப்பானில் உள்ள மாற்றுத்திறனாளிகள் காப்பகத்திற்குள் புகுந்த வாலிபர் நடத்திய கத்திக்குத்து சம்பவத்தில் 19 பேர் பலியாகியுள்ளனர், 26 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே உள்ள சகமிஹராவில் உள்ளது சுகூய் யமயுரி என் என்கிற மாற்றுத்திறனாளிகள் காப்பகம். அந்த காப்பகத்திற்குள் அதிகாலை 2.30 மணிக்கு புகுந்த 26 வயது வாலிபர் அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக கத்தியால் குத்தினார்.

இதில் காப்பகத்தில் இருந்தவர்களில் 19 பேர் பலியாகியுள்ளனர், 26 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் 20 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து அங்கிருந்து தப்பியோடிய வாலிபர் பின்னர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் அதே காப்பகத்தில் பணிபுரிந்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. உலகில் மாற்றுத்திறனாளிகள் இருக்கக் கூடாது என்று இவ்வாறு செய்ததாக அந்த வாலிபர் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் வரலாற்றிலேயே மோசமான கத்திக்குத்து சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 2008ம் ஆண்டில் ஒருவர் டோக்கியோவின் அகிஹபாராவில் மக்களை கண்மூடித்தனமாக கத்தியால் குத்தியதில் 7 பேர் பலியாகினர். ஜப்பானில் துப்பாக்கிகள் வாங்க கடும் கட்டுப்பாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications