புளூட்டோவை "பிளாக் அன்ட் ஒயிட்"ல பார்த்திருப்பீங்க.. கலர்ல பார்த்திருக்கீங்களா...??
வாஷிங்டன் : புளூட்டோவை ஆராய நாசா அனுப்பியுள்ள நியூ ஹொரைசன்ஸ் விண்கலம், முதல் முறையாக புளூட்டோவின் வண்ண நிற படங்களை படம் பிடித்து அனுப்பியுள்ளது.
சுமார் 9 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவால் புளூட்டோ கிரகம் குறித்து ஆராய அனுப்பப்பட்டது நியூ ஹொரைசன்ஸ் (New Horizons) என்ற ஆளில்லா விண்கலம்.

தற்போது புளூட்டோவில் இருந்து சுமார் 71 மில்லியன் மைல் தூரத்தில் இருந்தபடி, அதனை வண்ணமயமாக புகைப்படம் எடுத்துள்ளது ஹொரைசன்ஸ். புளூட்டோவோடு சேர்த்து அதன் பெரிய நிலவான சாரோனையும் அது புகைப்படம் எடுத்துள்ளது.
புளூட்டோ கிரகம் தொடர்பான முதல் வண்ணப் புகைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்தப் படம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த ஆண்டின் மிகப் பெரிய விண்வெளி நிகழ்வுகளில் ஒன்றாகவும் இது மாறியுள்ளது.

ஜூலை மாதம் புளூட்டோ கிரகத்தைத் தாண்டிச் செல்லவுள்ளது நியூ ஹொரைசன்ஸ். அப்போது இன்னும் அருகாமையில் புளூட்டோவைப் படம் பிடிக்கவுள்ளது இந்த விண்கலம். இதனால் புளூட்டோவை மிகவும் நெருக்கமாக பார்க்கும் வாய்ப்பு மனிதர்களுக்குக் கிடைக்கும்.
புளூட்டோ முன்பு 9 கிரகங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது. பின்னர். இதை குள்ள கிரகமாக அறிவித்து 9 கிரகங்களின் பட்டியலிலிருந்து நீக்கி விட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications