எம்டிவி குழு சென்ற ஹெலிகாப்டர் அணையில் விழுந்து 2 பேர் பலி
பியூனஸ்அயர்ஸ்: அர்ஜென்டினாவின் மென்டோசா அணையில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 2 பேரும் உயிரிழந்தனர்.
" தி செலஞ்ச் " எனும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிக்காக இடம் தேர்வு செய்ய எம் டிவி குழுவினர் சென்ற ஹெலிகாப்டர் மென்டோசா அணையின் மேலே பறந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஹெலிக்காப்டரை இயக்கிய பைலட் மற்றும் எம் டிவி டெக்னீசியன் உள்ளிட்ட 2 பேர் பலியாயினர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது,
மென்டோசா அணைப்பகுதியின் மேலே பறப்பதற்கு பெல் 206 ஹெலிக்காப்ப்டர் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவர்கள் அனுமதியின்றி பயணம் செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. காணாமல் போன ஹெலிக்காப்ப்டரின் பாகங்கள் அணையின் 200 அடி ஆழத்தில் கிடந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாயமானவர்களின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார்.
இது அர்ஜென்டினாவில் இந்த வருடத்தில் நடந்த இரண்டாவது ஹெலிக்காப்டர் விபத்து ஆகும். இதற்கு முன்பு மார்ச் மாதம் ஒரு ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிக்காக பயணிகள் சேவையில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று கிழே விழுந்து நொறுங்கியதில் 10 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications