எகிப்தில் திடீரென பாய்ந்து வந்த குண்டுகள்! இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் 2 பேர் பலி.. பெரும் பதற்றம்!
அலெக்சாண்டரியா: இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக் குழுவினரால் நடத்தப்பட்ட திடீர் ஏவுகணை தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து போர் முற்றியுள்ளது. இந்நிலையில், எகிப்தில் 2 இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நடந்து வந்த நிலையில், தற்போது இரு நாடுகளுக்கும் இடையே போர் உக்கிரம் அடைந்துள்ளது. கடந்த 16 ஆண்டுகளில் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பல சண்டைகள், ஏவுகணை தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்நிலையில், நேற்று காஸா முனையில் பாலஸ்தீன தீவிரவாதிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி இஸ்ரேல் மீது ஒரே நேரத்தில் 5000 ராக்கெட்டுகளை ஏவியுள்ளனர்.

மேலும், ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலிய நகரங்களுக்குள் நுழைந்து பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மேலும், காஸாவில் ஹமாஸ் ஆயுதப் படையினர் இஸ்ரேலிய பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்களை துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்று வைத்திருப்பதை இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஹமாஸ் படையினரின் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியது. இதிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை, இருதரப்பிலும் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினர் இடையேயான போர் உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் எகிப்தில் இரண்டு இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள சுற்றுலா தளத்தில் ஒரு போலீஸ்காரர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஒரு எகிப்தியர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இஸ்ரேலிய சுற்றுலாக் குழு பயணித்த சுற்றுலா பேருந்து மீது அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள செராபியம் என்ற பழங்கால ரோமானிய நினைவுச்சின்னம் அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டதை இஸ்ரேலின் ஜாகா மீட்பு சேவை உறுதிப்படுத்தியது. அதே நேரத்தில் இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம், இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மீது துப்பாக்கி ஏந்திய நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளியான செய்திகளை ஆராய்ந்து வருவதாகக் கூறியுள்ளது.
எகிப்திய அதிகாரிகள், குறிப்பாக உயர்மட்ட உளவுத்துறை அதிகாரி அப்பாஸ் கமெல், காஸா பகுதியுடனான தனது எல்லையை எகிப்து மூடிவிட்ட போதிலும், காஸாவில் உறவுகளை குளிர்விக்கும் முயற்சியில் பாலஸ்தீனிய போராளிக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் முன்னணிப் பாத்திரத்தை வகிக்கிறார் என்று தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications