இதுவரை கிடைத்த பாகங்கள் மாயமான மலேசிய விமானத்தினுடையது என உறுதியாகவில்லை: மலேசியா
கோலாலம்பூர்: மொசாம்பிக்கில் கிடைத்த இரண்டு விமான பாகங்கள் மாயமான மலேசிய விமானத்தினுடையதா என்பதை கண்டறிய அவை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் லியோவ் டியோங் லாய் தெரிவித்துள்ளார். தற்பது கிடைத்துள்ள விமான பாகங்கள் எதுவும் மாயமான மலேசிய விமானத்துனுடையது என்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்திய பெருங்கடலோரம் அமைந்துள்ள மொசாம்பிக்கில் கரை ஒதுங்கிய விமான பாகம் தற்போது மலேசியாவுக்கு வந்துள்ளதாக மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் லியோவ் டியோங் லாய் தெரிவித்துள்ளார். அந்த பாகத்தை அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் கண்டுபிடித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
தென்னாப்பிரிக்காவை சேர்ந்த குடும்பம் ஒன்று அண்மையில் மொசாம்பிக்கிற்கு சுற்றுலா சென்றுள்ளது. அங்கு கரை ஒதுங்கிய மற்றொரு விமான பாகத்தை அந்த குடும்பத்தார் தங்களுடன் தென்னாப்பிரிக்காவுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
அந்த பாகத்தை வாங்க மலேசிய குழு தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. அந்த குழு இந்த வாரம் நாடு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பாகமும் மலேசியா கொண்டு வரப்பட்ட பிறகு இரண்டு பாகங்களும் மாயமான மலேசிய விமானத்தினுடையதா என்பதை தெரிந்து கொள்ள ஆய்விற்காக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்படும்.
மேலும் ஏதாவது பாகங்கள் கிடைக்கிறதா என்பதை அறிய குழு ஒன்றை மொசாம்பிக்கிற்கு அனுப்பி வைக்க உள்ளோம். ரீயூனியன் தீவில் கிடைத்த விமான பாகம் பிரான்சிற்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு பிரான்ஸ் மற்றும் மலேசிய குழுக்கள் அந்த பாகத்தை ஆய்வு செய்யும்.
தற்பது கிடைத்துள்ள விமான பாகங்கள் எதுவும் மாயமான மலேசிய விமானத்துனுடையது என்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றார்.
கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. பின்னர் விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications