டிரம்ப்பின் காருக்கு முன் மேலாடை இல்லாமல் ஓடி வந்த 2 பெண்கள்.. என்ன காரணம்?!
அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் இரண்டு பெண்கள் மேலாடையால் இல்லாமல் அவருக்கு முன் ஓடி வந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாரிஸ்: அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் இரண்டு பெண்கள் மேலாடையால் இல்லாமல் அவருக்கு முன் ஓடி வந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் முதல் உலகப்போர் நூற்றாண்டு நிறைவு விழா அனுசரிக்கப்படுகிறது. முதல் உலகப்போர் 1918 நவம்பர் 11ம் தேதி முடிவடைந்தது.
இதன் நூறாவது ஆண்டு விழா உலகம் முழுக்க நடக்கிறது. இதற்காக பிரான்சில் பெரிய விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலக தலைவர் கலந்து கொண்டுள்ளனர்
பிரான்சில் நடக்கும் விழாவில் உலகின் முக்கிய 70 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். பாரிஸில் உள்ள ஆர்க் டி டிரையோம்ப்பில் இந்த விழா நடக்கிறது.
|
வேகமாக ஓடி வந்தார்
இந்த நிலையில் அதிபர் டிரம்ப் இந்த விழாவிற்கு செல்லும் போது அவரின் காரை மறிக்கும் வகையில் பெண் ஒருவர் மேலாடை இல்லமால் ஓடி வந்துள்ளார். அவரை தொடர்ந்து அவருக்கு பின் இன்னொரு பெண்ணும் மேலாடை இல்லாமல் ஓடி வந்தார். இவர்கள் இருவரின் உடலிலும் ''வெல்கம் வார் கிரிமினல்ஸ் - போர் குற்றவாளிகளே வருக (welcome war criminals)'' என்று எழுதப்பட்டு இருந்தது.

யார் இவர்
இவர்கள் இருவரும் பேமென் FEMEN என்ற அமைப்பை சேர்ந்தவர்கள். அந்த அமைப்பு பிரான்சின் பெரிய பெண்ணுரிமை அமைப்பு ஆகும். பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் வன்முறை, சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை என்று பல விஷயங்களுக்கு எதிராக இந்த அமைப்பு போராடி வருகிறது. அவர்கள்தான் டிரம்ப்பின் வருகைக்கும் எதிர்ப்பு தெரிவித்தது.

கைதும் பாதுகாப்பும்
இந்த நிலையில் அந்த பெண்கள் இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். இது டிரம்ப்பின் பாதுகாப்பில் பெரிய கேள்விக்குறியை எழுப்பி இருக்கிறது. உலகம் முழுக்க ஆடை இல்லாமல் பெரிய தலைவர்களுக்கு முன் ஓடுவது தற்போது ஒரு போராட்ட முறையாக மாறியுள்ளது. இதனால் அந்த பெண்களுக்கு ஒரு பக்கம் ஆதரவும் குவிந்து வருகிறது.
-
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications