ரோமில் ஒரு பயங்கரம்.. மெட்ரோ ரயில் நிலைய எஸ்கலேட்டர் விழுந்து 20 பேர் படுகாயம்
ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் செயலிழந்ததில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
Recommended Video

ரோம், இத்தாலி: இத்தாலியின் ரோம் நகரில் மெட்ரோ ரயில் நிலைத்தில் எஸ்கலேட்டர் பழுதடைந்து விழுந்ததில் 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பலர் ரஷ்ய நாட்டு கால்பந்து விசிறிகள் ஆவர். பலருக்கு கால்களில் அடிபட்டுள்ளது.
ரிபப்ளிகா மெட்ரோ நிலையத்தில்தான் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. அந்த எஸ்கலேட்டர் திடீரென கீழ் நோக்கி வேகமாக இறங்க ஆரம்பித்தது.

அலறிய பயணிகள்
இதனால் அதில் நின்றிருந்தவர்கள் குழப்பமடைந்தனர். பிறகுதான் தெரிந்தது எஸ்கலேட்டர் பழுதடைந்து கீழே விழுந்து கொண்டிருக்கிறது என்று. கீழே வேகமாக விழுந்த எஸ்கலேட்டரில் சிக்கி காயமடைந்தவர்கள் காப்பாற்றக் கோரி அலறினர். ஒருவர் மீது ஒருவர் விழுந்து கிடந்தனர்.

என்ன காரணம்?
இதில் 20 பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்த பலரும் ரஷ்ய நாட்டு கால்பந்து ரசிகர்கள். அவர்களில் பலர் நல்ல குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள்தான் எஸ்கலேட்டரில் பயணித்தபோது தாம் தூம் என்று குதித்து ஆடியுள்ளனர். இதனால்தான் விபத்து நேரிட்டதாக ஒரு தரப்பு சொல்கிறது. ஆனால் எஸ்கலேட்டர் பழுது காரணமாகவே விபத்து நடந்ததாக இன்னொரு தகவல் கூறுகிறது.

காயமடைந்தோருக்கு உதவி
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரோம் மேயர் விர்ஜீனியா ராகி கூறுகையில், விபத்துக்கான காரணம் குறித்து பின்னர் ஆராயப்படும். இப்போதைக்கு காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்றார்.
|
லீக் போட்டி தொடக்கம்
விபத்து நடந்த இடத்திற்கு அருகில்தான் கால்பந்து மைதானம் உள்ளது. அங்கு சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் தொடங்கியுள்ளன. ரோமா மற்றும் ரஷ்யாவின் மாஸ்கோ கிளப் அணிகளுக்கு இடையிலான போட்டிகளை பார்க்க ரஷ்ய ரசிகர்கள் வந்தபோதுதான் விபத்து நடந்தது குறிப்பிடத்தக்கது.
எலிவேட்டர் வேகமாக செல்வதும், அதிலிருந்து அனைவரும் ஒருவர் மீது ஒருவர் விழும் வீடியோவும் வைரலாகி வருகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications