25 சதவீத அமெரிக்க பணக்காரர்கள் வசிப்பது கலிபோர்னியாவில்தானாம்!! - ஃபோர்ப்ஸ் ஆய்வு
வாஷிங்டன்: அமெரிக்காவிலேயே அதிக பணக்காரர்கள் வசிக்கும் மாநிலமாகத் திகழ்கிறது கலிபோர்னியா. மொத்தம் 25 சதவீத பணக்காரர்கள் இந்த மாநிலத்தில்தான் வசிப்பதாக ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் மட்டும் 442 பில்லியனேர்கள் வசிப்பதாக ஃபோர்ப்ஸ் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

இவர்களில் 111 பில்லியனேர்கள் சிலிக்கான் பள்ளத்தாக்கு எனப்படும் கலிபோர்னியாவில் வசிக்கிறார்களாம். 88 பேர் நியூயார்க்கில் வசிக்கிறார்களாம்.
இந்த ஆய்வின் அடிப்படையில் அமெரிக்காவின் மற்ற மாநிலங்களில் எத்தனை கோடீஸ்வரர்கள் வசிக்கிறார்கள் என்பதை ஒரு வரைபடமாகவே வெளியிட்டுள்ளது மோவோடோ எனும் ரியல் எஸ்டேட் நிறுவனம்.
ஒவ்வொரு மாநிலத்திலும் டாப் பில்லியனேர் யார் என்பதையும் அந்த வரைபடத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
எப்படி இவர்கள் பில்லியனேர்களானார்கள் என்பதையும் அலசியுள்ளனர்.
தொழிலதிபர்கள், கோடீஸ்வர வாரிசுகள் மற்றும் விதவைகள்தான் இப்படி கோடீஸ்வரர்களாக கொடிகட்டிப் பறப்பதாக அதில் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் இப்படி பெரும் கோடீஸ்வரர்களாக படிப்பறிவு முக்கியமில்லை.. குறைந்த படிப்பறிவு இருந்தாலும், தொழில் திறமை மற்றும் அமையும் வாய்ப்புகள்தான் முக்கியம் என்பதும் தெரிய வந்துள்ளது.


Click it and Unblock the Notifications
