ஆபாச பட நடிகை சுத்தியலால் அடித்து கொலை.. சடலத்தை பிரிட்ஜில் வைத்த காதலன் கைது.. பரபரப்பு வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

ரோம்: ஆபாச படங்களில் நடிக்கும் நடிகையை சுத்தியால் அடித்து கொன்ற புகைப்படக்காரர் அந்த நடிகையின் சடலத்தை ஒரு மாதமாக பிரிட்ஜில் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

இத்தாலி நாட்டின் ரெஸ்கால்டினா பகுதியில் வசித்து வந்தவர் சார்லோட் ஆங்கி (26). வாசனை திரவியக் கடையில் விற்பனை உதவியாளராகப் பணியாற்றி வந்தார். கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கால் அந்தக் கடை மூடப்பட்டது.

வேலை பறிபோனதால் மனமுடைந்த நிலையில் இருந்த ஆங்கி, தனது ஆபாச படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டார். இதன் மூலம் இணையத்தில் மிகவும் பிரபலமடைந்தார். இதன் மூலம் இவருக்கு நல்ல வருவாயும் கிடைத்தது.

ஆபாச டான்ஸ்

ஆபாச டான்ஸ்

கடந்த மார்ச் 11 முதல் 13 ஆம் தேதி வரை லக்ஸி கிளப்பில் ஆபாச டான்ஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் சொன்ன நேரத்தையும் தாண்டி ஆங்கி நிகழ்ச்சிக்கு வரவேயில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

ஆங்கி மாயம்

ஆங்கி மாயம்

ஆங்கி மாயமானது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அவரது ரசிகர்களில் ஒருவர் ஆங்கியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை போலீஸார் தேடி வந்தனர். அவரது பெயர் டேவிட் ஃபோன்டானா (43) என்பதும் அவர் ஆங்கியின் பக்கத்து வீட்டில் வசித்து வருவதும் தெரியவந்தது.

புகைப்பட கலைஞர்

புகைப்பட கலைஞர்

இவர் புகைப்படக் கலைஞரான நிலையில் ஆங்கியுடன் நெருங்கி பழகியுள்ளார். இருவரும் மிகவும் நெருக்கமாகவே பழகி வந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஆங்கியை தீர்த்து கட்ட ஃபோன்டானா முடிவு செய்தார்.

சுத்தியால் அடித்து கொன்ற காதலன்

சுத்தியால் அடித்து கொன்ற காதலன்

அதன்படி ஆங்கியை தனது வீட்டிற்கு வரவழைத்த அவர் ஆங்கியை சுத்தியால் அடித்துக் கொன்றார். அவர் இறந்ததை உறுதி செய்ததும் சடலத்தை குளிர்சாதன பெட்டியில் அடைத்து வைத்தார். ஒரு மாதத்திற்கு பிறகு அந்த சடலத்தை துண்டு துண்டாக வெட்டி தீயில் எரித்ததாக தெரிகிறது.

காதலன் கைது

காதலன் கைது

எரித்த உடல் பாகங்களை ஒரு சாக்குப் பையில் கட்டி சாலையில் தூக்கிவீசியுள்ளார். தற்போது கைது செய்யப்பட்ட ஃபோன்டானா, ஆங்கியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+