ஆவிகளுடன் பேசும் ஓயிஜா போர்டு.. விளையாடிய 28 மாணவிகளுக்கு நடந்த அமானுஷ்யம்.. நடந்தது என்ன?
ஓயிஜா போர்டை வைத்து ஆவிகளுடன் பேச முயன்ற 28 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
விர்ஜீனியா: ஓயிஜா போர்டை வைத்து ஆவிகளுடன் பேசுவதாக விளையாடிய போது அவர்கள் மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கொலம்பியாவில் நடந்துள்ளது.
பேய் இருக்கிறதா இல்லையா, நம்பலாமா நம்ப கூடாதா என்றெல்லாம் இன்று வரை கேள்விகள் உள்ளன. அதிலும் பேய்களுக்கு கால் இருக்குமா இருக்காதா, பேய்களின் உடை வெள்ளை நிறமா என்றெல்லாம் சினிமாக்களை பார்த்து கேள்வி எழுப்பி வருகிறோம்.
சிலர் பேய், பிசாசு என்பதெல்லாம் ஒன்றும் இல்லை. அவை எல்லாம் நம் கற்பனைதான் என்கிறார்கள். சிலர் விபத்துகள், ஆசை நிறைவேறாமல் துர் மரணம் அடைவோர் ஆவிகளாக சுற்றுவார்கள் என கூறுகிறார்கள்.

ஆவிகளுடன் பேச
ஆவிகளுடன் பேச வைப்பதாக பல போலி ஆசாமிகள் ஊரை ஏமாற்றி வருவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் பேய் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிய வெளிநாடுகளில் சில டெக்னிக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. ஓயிஜா எனும் ஒரு போர்ட் இருக்கிறது. இதை பயன்படுத்தி ஆவிகளுடன் பேச முடியும் என்கிறார்கள்.

அமானுஷ்யங்கள்
அமானுஷ்யமான விஷயங்களை அறிந்து கொள்வதில் நிறைய பேருக்கு ஆர்வம் இருக்கிறது. அதிலும் பள்ளி மாணவிகள் என்றால் கேட்க வேண்டுமா என்ன. ஓயிஜா போர்டை வைத்து ஆவிகளுடன் பேச முயன்ற 28 மாணவிகள் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். 1886 ம் ஆண்டு இறந்தவர்களுடன் பேசுவதற்காகவே ஓயிஜா போர்டு அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது.

சாதனத்தின் மீது விரல்கள்
அதாவது பிளான்செட் எனும் அந்த சாதனத்தின் மேல் நமது விரல்களை வைத்து கேள்வி கேட்க வேண்டும். அந்த பலகை மீதுள்ள எழுத்துகள் நகர்ந்து பதில் வரும். இந்த போர்டைதான் ஆவிகளுடன் பேசும் ஓயிஜா போர்டு என்கிறார்கள். இந்த போர்டு மூலம் ஆவிகள் பதில் சொல்லும் என்கிறார்கள். இந்த போர்டை வைத்துதான் கொலம்பியாவை சேர்ந்த 28 மாணவிகள் விளையாடி மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஓயிஜா போர்டு
இந்த மாணவிகளுக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. ஆனால் இவர்கள் பள்ளிகளில் ஓயிஜா போர்டை பயன்படுத்துவதாக பெற்றோர்கள் ஏற்கெனவே குற்றம்சாட்டியிருந்தனர். அதனால் அவர்கள் ஓயிஜா போர்டில் விளையாடிருக்கலாம் என தெரிகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகள் கவலையிலும் பதற்றத்திலும் இருக்கிறார்கள். ஓயிஜா போர்டு விளையாடி மருத்துவமனையில் குழந்தைகள் அனுமதிக்கப்படுவது இதுவே முதல்முறை. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த ஓயிஜா போர்டு விளையாடிய 5 இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications