தென்னாப்பிரிக்காவில் பஸ்-லாரி பயங்கர மோதல்: 29 பேர் பலி, 11 பேர் படுகாயம்
ஜொஹன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவில் பயணிகள் பேருந்தும், டிரக்கும் மோதிக் கொண்டதில் 29 பேர் பலியாகினர், 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
தென்னாப்பிரிக்க தலைநகர் ப்ரிடோரியாவின் கிழக்குப் பகுதியில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள க்வாகபோன்டெய்ன் நகர் அருகே பயணிகள் பேருந்தும், டிரக்கும் பயங்கரமாக மோதிக் கொண்டது. இதில் 29 பேர் பலியாகினர், 11 பேர் படுகாயம் அடைந்தனர். சாலையில் நின்று கொண்டிருந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க டிரக்கை திருப்பியபோது அது பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது என்று கூறப்படுகிறது.
இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
விபத்து நடந்த இடமான மொலோடோ சாலையில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. சுமார் 50,000 பேர் ப்ரிடோரியாவுக்கு வேலைக்கு செல்ல குண்டும் குழியுமாக உள்ள சாலையில் பேருந்துகள் மூலம் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications